ஆவிகள் இல்லையடி பாப்பா! ஆவிகள் இல்லையடி பாப்பா!
ஆவிகள் இல்லையடி பாப்பா
(விதை2விருட்சம் சத்தியமூர்த்தி)
2013 (மார்ச்) மாதம் வெளி வந்துள்ள ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் உங்கள் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி (நான்) எழுதிய ஆவிகள் இல்லையடி பாப்பா என்ற கட்டுரை (இதழில் பக்க எண். 18-ல்) வெளிவந்துள்ளது. நான் எழுதிய அந்த கட்டுரையை விதை2 விருட்சம் வாசகர்களுக்காக, விதை2விருட்சம் இணையத்தில் வெளியிட்டுள்ளேன். படித்து பயமின்றி வாழ்ந்திட விதை2விருட்சம் கேட்டுக்கொள்கிறது.
மனிதன் இறந்த பின் அவனுடைய உடலிலிருந்து பிரிந்த உயிருக்கு, ஆவி, ஆன்மா, ஆத்மா, பேய், பிசாசு, பூதம், காத்து, கறுப்பு, காட்டேறி, சைத்தான், சாத்தான் என்று ஏகப்ட்ட பெயர்களில் குறிப்பிடுவது உண்டு
மேலே ஆவிகளுக்கு இருக்கும் பெயர்களில் ஆவி என்ற ஒரு வார்த்தையை எடுத்துக்கொள்வோம். இந்த ஆவிகளுக்கு என்றே தனிப்பட்ட உலகம் உண்டு என்றும் அதற்கு ஆவிகள் உலகம் என்றும் ஆவிகளை நம்புபவ ர்கள் பெயரிட்