
காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்
காதல் முறிவு - தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் - ஓரலசல்
காதல் என்பது ஓர் உன்னதமான உணர்வு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அந்த உன்னதமான காதல் உண்மையான வர்களுக்கு, நேர்மையான வர்களுக்கு வந்தால் அந்த உன்னத காதல், மென்மேலும் மெருகேறும் என்பது நிதர்சனமான உண்மையே!
ஆனால் தற்போதெல்லாம் உன்னத காதலுக்கு இழுக்கு ஏற்படும் வகையில்தான் காதலென்ற பெயரில் வக்கிரங்களும், காம லீலைகளும் அரங்கேறி இந்த சமூகம், மலத்தைவிட பன்மடங்கு துர்நாற்றம் வீசி சீர்கெட்டு போயுள்ளது. இது வேதனை தரும் விடயம்தான்.
காதலுக்கு எதிர்ப்பு என்பது மொழி, சாதி, இனம், மதம் போன்ற வற்றால் வருவது சகஜமானது என்றாலும் அத்தகைய எதிர்புக்களை யெல்லாம் சமாளித்து காதலித்தவரையே கரம்பிடித்து ஆயுள்முழுக்க அன்யோன்யமாக வாழ்ந்து காதலுக்கு பெருமை சேர்த்தவர்கள் வெகு சிலரே. மேற்படி எதிர்ப்புக்கள் அத்தனையும் சமாளித்து, சட்