
கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் – ஓர் உண்மைச் சம்பவம்
கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் - ஓர் உண்மைச் சம்பவம்
கலைஞரை அனைவரும் சிரித்து பார்த்திருப்போம், சிலர் அழுதும் பாரத்திருப்போம். ஆனால் பெரும்பாலானோர் அவர் கோபப்பட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படியும் ஒரு சம்பவம் கடந்த 1957ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்த சமயம். நிதி அமைச்சராக சி.சுப்பரமணியின் இருந்தார். சட்டப்பேரவையில் நடந்த ஒரு விவாதத்தில், தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் விதத்தில், இளம் பெரியார் என்று அழைக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி, தன்னுடைய கையை உயர்த்தி சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார். பல முறை முயன்றும் அவரை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவில்லை. அவையில் ஒரு பகுதியில் இருந்து இதனை கலைஞர் கவனித்து வந்தார்.
அப்பொழுது திடீரென எழுந்த அமைச்சர் சி.சுப்பரமணியின், ஆசைத்தம்பியிடம் உங்களுக்கு சிறுநீர் வந்தால் த