
ஆரஞ்சு பழச் சாற்றில் கை விரல்களை ஊற வைத்து கழுவினால்
ஆரஞ்சு பழச் சாற்றில் கைவிரல்களை ஊற வைத்து கழுவினால்
விரல்களுக்கு அழகுசேர்க்கும் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமா? இதோ ஆரெஞ்சு பழம் இருக்க பயமேன்? ஆரஞ்சு பழத்தில் ஃபாலிக் அமிலம் அதிகளவில் இருக்கிறது. இந்த அமிலம்தான் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்க வைக்கவும் உதவும்.
ஆகவே, ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு பழச்சாற்றை எடுத்துக் கொண்டு அதில் உங்கள் கை விரல்களை தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை வைத்து ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு உங்கள் கைவிரல்களை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, மிருதுவான துணியால் துடைக்க வேண்டும். இதேபோன்று தினந்தோறும் ஒரு முறை செய்து வந்தால் உங்கள் நகம் வளர்வதில் எவ்வித சிக்கல்களோ தடைகளோ இல்லாமல் நகங்கள் விரைவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும்.
#finger, #Fruit, #Hand, #leg, #Lemon, #Nail, #Nails, #vidhai2virutcham, #vid#haito