"தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது' என, கர்நாடக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிக் கூட்டத்தில் நடந்த காரசார விவாதத்துக்குப் பின், இம்முடிவு எடுக்கப் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
"தமிழக விவசாயத்திற்கு, மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் எடியூரப்பா, சட்டசபை மற்றும் மேலவை அனைத்து கட்சிக் கூட்டத்தை அவரது அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் நேற்று மாலை கூட்டியிருந்தார். கர்நாடக அரசியலில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள், ஒரு மாதமாக, எடியூரப்பாவின் பா.ஜ., ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும் என, கடும் முயற்சி மேற்கொண்டன. மூன்று கட்சித் தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் அறிக்கை விடுவதும், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர். இந்நி