Tuesday, July 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: காஷ்மீர்

மத்திய அரசை கடுமையாக விளாசும் நடிகர் விஜய் சேதுபதி!

மத்திய அரசை கடுமையாக விளாசும் நடிகர் விஜய் சேதுபதி!

மத்திய அரசை கடுமையாக விளாசும் நடிகர் விஜய் சேதுபதி! காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேயாவில் செயல்படும் எஸ்.பி.எஸ் தமிழ் செய்தி நிறுவனத்து ஒலிமுறையில் விஜய் சேதுபதி பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு ஜனநாயக விரோதமானது. பெரியார் அன்றே சொல்லிவிட்டார். அந்தந்த மக்கள் பிரச்னையை அந்தந்த மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். நான், உங்கள் வீட்டு விஷயங்களில் தலையிட முடியுமா? நீங்கள் தான் அந்த வீட்டில் வாழ்கிறீர்கள். உங்கள் வீட்டு பிரச்னை உங்களுக்குத் தான் தெரியும். நான் உங்கள் மீது அக்கறை செலுத்தலாம். ஆனால், ஆளுமை செலுத்த முடியாது.
ரத்து – காஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்து – மத்திய பாஜக அரசு அதிரடி

ரத்து – காஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்து – மத்திய பாஜக அரசு அதிரடி

காஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்து ரத்து - மத்திய பாஜக அரசு அதிரடி இதற்கிடையே, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று முடிவடைந்தது. கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஏ-ஐ ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப் பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதாவது சட்டப்பேரவை யுடன் கூடிய யூனியன் பிரதேசம

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ராணுவ பலம் என்ன?

நாம் நட்புடன் இருக்க முயன்றாலும் நம்முடன் பகை நாடுகளாகவே விரோ தம்    காட்டி வருகிறது பாகிஸ்தானும், சீனாவும் . சீனா இந்தியா மீது 1962-ம் ஆண்டு போர் தொ டுத்தது. அதன் பின் இந்தியா வுடன் எந்த நேர்முக போரிலு ம் ஈடுபடவில்லை என்றாலும் இந்தியா மீது மறைமுக யுத்தத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சீன போரின்போது காஷ்மீர், இமாச்சல பிரதேசம் பகுதியில் கைப்பற்றப்பட்ட பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்தை இன்னும் திருப்பி தர மறுக்கி றது. சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலம் எங் (more…)

எழுத்தாளர் ராய் பேசியதால் சர்ச்சையில் சிக்கினார்; தேசவிரோத பேச்சு; கைது செய்ய போலீஸ் திட்டம்

பிரபல எழுத்தாளர் சமூக நலவிரும்பி காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரது சமீபத்திய பேச்சு தேசவிரோத குற்றமாக எழுந்துள்ளது. இந்த பேச்சின் அடிப்படையில் இவரையும் மற்றும் பிரிவினைவாத தலைவர் கிலானி ஆகியார் மீது தேசத்திற்கு எதிராக கலகமூட்டும் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்பப்படும் என தெரிகிறது. இந்த வழக்கின்படி ( பிரிவு 124- ஏ செக்க்ஷனில்) கைது செய்யப்பட்டு ஆயுள்தண்டனை வரை வழங்கலாம் குறைந்தது 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அநுபவிக்க வேண்டியது இருக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக டில்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் அருந்ததிராய் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசினார். இவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிரானது என அரசியல் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. டில்லி போலீசாருக்கு  இவரது பேச்சு குறித்து வழக்குப்பதிவு செய்ய மறைமுக உத்தரவு பி

அருந்ததி ரா‌ய்: காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை

''ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவில்லை'' எ‌ன்று பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய் தெரிவித்து‌ள்ளா‌ர். காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தது குறித்து அரு‌ந்த‌தி ரா‌ய் பே‌சிய பே‌ச்சு சர்ச்சையானதை‌த் தொட‌‌ர்‌ந்து, தற்போது இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கு ஒன்றில் அருந்ததி ராய் உரையாற்றினார். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக ஒருபோதும் இருக்கவில்லை. இது வரலாற்று உண்மை. இந்திய அரசும் இதை ஏற்றுக்கொண்டுள்ளதாக அருந்ததி ராய் அப்போது குறிப்பி‌ட்டு‌ள்ளா‌‌ர்.

ராணுவ தளபதி சிங் தகவல்: பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 42 பயங்கரவாத முகாம்கள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில், புதிதாக தோன்றிய ஒன்று உட்பட, 42 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன,'' என, ராணுவ தளபதி ஜெனரல் வி.கே.சிங் கூறியுள்ளார். டில்லியில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: எல்லையில், சமீபகாலமாக ஊடுருவல் அதிகரித்துள்ளது. இந்தியாவுக்குள் ஊடுருவ, 600க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு அருகேயும், சர்வதேச எல்லை அருகேயும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவுக்கு எதிரான மறைமுகப் போருக்காக, பாகிஸ்தான் பெருமளவு முதலீடு செய்துள்ளது. பயங்கரவாத முகாம்களை அழிக்க, பாக்., அரசு எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், புதிதாக தோன்றிய ஒன்று உட்பட, 42 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் தற்போது செயல்படுகின்றன. அங்கு, பெண்