பல அவதாரங்கள் எடுத்து, பக்தர்களை காத்தார் பகவான்; அதில், ஸ்ரீ கிருஷ்ணாவதாரமும் ஒன்று. இந்த அவ தாரத்தில், அவரது அருள் பெற்றவர்கள் ஏராளம். பகவானுக்கு இப்படி அருள் செய் வதிலேயே ஒரு தனி ஆனந்தம். இது தான் பகவத் குணம். ஒரு சமயம், தீட்சித பத்தினிகளுக்கு உபதேசம் செய்து, அருள் செய்ய வேண்டும் என்று எண்ணினார்; அதற்கு, சந்தர்ப்பமும் ஏற்பட்டது. யமு னா நதிக்கரையில் கோபர்களுடன் தங்கி இருந்தார். அவர்களுக்கு பசி உண்டா யிற்று; கண்ணனிடம் கூறினர். அதைக் கேட்ட கிருஷ்ணன், "இங்கே அருகாமை யில் தீட்சிதர்கள் யாகம் செய்கி ன்றனர். அங்கே நிறைய போஜன பதார்த் தங்கள் இருக்கும். உங்களில் ஒரு சிலர் அங்கே போய், "கிருஷ்ணர், பலராமர் மற்றும் பல கோபர்கள் யமுனை கரையில் தங்கி இருக்கின்றனர்; பசியால் வாடுகின்றனர். அவர்களுக்காக அன்னம் கொடுங்கள்... என்று (more…)