Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கீதை

“கண்ணன், சித்தருக்கு உபதேசித்த கீதை”! – நீங்க அறியாத‌ அரிய தகவல் இது!

சித்தரகள் பலரும் சிவனை வழிபடுபவ ராகவே நாம் அறிந்திருக்கிறோம். ஆனா ல் நமக்கு தெரியாத விடயம் மாயக் கண் ணனே ஒருமுறை ஒரு சித்தருக்கு கீதை யை உபதே சித்திருக்கிறான். முன்னொரு காலத்தில் ஒரு முறை வய தான யோகி ஒருவர் தீராத தலை வலி காரணமாக சித்தரான பிண் ணாக்கீசரை சந்தித்தார். "பிண்ணாக்கீசா...உன் சேவை பறறி நிறையவே கேள் விப்பட்டேன்.வலி துன்பம் என்று உன்னை வந்தடைபவர் துயர்துடைக்கும் மருத்துவ ஞானத்தை (more…)

அர்த்தமுள்ள இந்துமதம்- 14. கீதையில் மனித மனம்-

கவியரசு கண்ணதாசன் அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை. மனிதனின் மனதைப்பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. கண்ணன் சொல்கிறான்: “அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.” அர்ஜுனன் கேட்கிறான்:  “மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை; காரணம், உள்ளம் சஞ்சலமுடையது. கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது; காற்றை அடக்குவது போல் அதை அடக்குவது கடினமானது.” பகவான் கூறுகிறான்: “தோள் வலி படைத்த காண்டீபா! மனம் அடக்க முடியாதது; சலனமடைவது; இதில் ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே! பழக்கத்தால் அதை அடக்கமுடியும்.” இதையே ராமகிருஷ்ண பரமஹம்சர் இப்படிக் கூறுகிறார்: “கீழே கொட்டிய கடுகைப் பொ