Monday, July 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: குறித்து

கூட்டணி குறித்து உத்திகள் வகுக்க திட்டம்: முதல்வர், சோனியாவுடன் ஆலோசனை

வரும் 30ம் தேதி முதல்வர் கருணாநிதி டில்லி செல்கிறார். அங்கு நடைபெறவுள்ள உள்துறை அமைச்சக மாநாட்டில் பங்கேற்கிறார். டில்லியில் அவர் இரண்டு நாட்கள் தங்குவதால், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியின் தொகுதி பங்கீடு குறி த்தும், தேர்தல் வெற்றிக் கான உத்திகள் வகுப்பது குறித்தும் ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம், முதல் தேதி டில்லியில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது. இம் மாநாட்டில் பங்கேற் பதற்கு வரும் 30ம் தேதி மாலை முதல்வர் கருணாநிதி, டில்லிக்கு (more…)

தமிழக போக்குவரத்துகழங்கங்களின் நஷ்டம் ரூ.1000 கோடி: டீசல் பற்றாக்குறை குறித்து அமைச்சர் விளக்கம்

"தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கு கின்றன' என, அமைச்சர் நேரு, சட்ட சபையில் அதிர்ச்சித் தகவலை வெளி யிட்டார். டீசல் பற்றாக் குறை காரணமாக பஸ்கள் இயக்கம் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் விளக்க மளித்தார். தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, போக்கு வரத்துத் துறை தொடர்பாக அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தொடர் கேள்விகளை (more…)

கம்ப்யூட்டர் வாங்கும்போது, விண்டோஸ் எக்ஸ்பி பதிப்பு மற்றும் அதில் அப்டேட் செய்யப்பட்ட சர்வீஸ் பேக் குறித்து நமக்கு தெரியவில்லை என்றால், அதனை எப்படித் தெரிந்து கொள்வது?

நாம் கம்ப்யூட்டர் வாங்கும் போது அதில் விண்டோஸ் எக்ஸ்பி உள்ளது ஆனால் அதன் பதிப்பு மற்றும்  அதில் அப்டேட் செய்யப்பட்ட சர்வீஸ் பேக் குறித்து நமக்கு தெரிய வில்லை என்றால், அதனை எப்படித் தெரிந்து கொள்வது? இது சற்று சிக்கலான நிலை தான். கம்ப்யூட்டர் ஒன்றின் அடிப்படையான விஷயம் அதன் சிஸ்டம் தான்.  அந்த சிஸ்டமும் எந்த பதிப்பு என்று அறிய முடியாமல் இருப்பது துரதிர்ஷ்டம் ஆகும். சிஸ்டத்தின் எந்த பதிப்பு மற்றும் சர்வீஸ் பேக் தெரிந்தால் தான், அதில் என்ன புரோகிராம்களைப் பதியலாம் என்று நம்மால் ஒரு முடிவிற்கு வர முடியும். இதனை கம்ப்யூட்டரை இயக்கி நம்மால் தெரிந்து கொள்ள முடியும். விண்டோஸ் கீயை அழுத்தி, உடன் ‘R’   கீயை அழுத்துங்கள். இது உங்கள் கர்சரை ரன் கட்டத்தில் கொண்டு நிறுத்தும். அதில் ‘winver’  என டைப் செய்து என்டர் தட்டவும். உடனே சிறிய விண்டோ ஒன்றில், சிஸ்டத்தின் பெயர் பெரிய எழுத்தில்,மைக்ரோசாப்ட

பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தும் இஞ்சி,வெங்காயம், பூண்டு

பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவுகிறது. இதனால் நாடு முழுவதும் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இடைவிடாத சளி, இருமல் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளது. இது ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் தொற்று நோய். முதன் முதலில் மெக்சிகோ நாட்டில்தான் பன்றிக்காய்ச்சலுக்கான நோய் கிருமி உருவானது. நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கிருந்து காற்றின் மூலம் மற்ற உலக நாடுகளுக்கும் பரவியது. இந்த நோய் தாக்கப்பட்ட மனிதன் இருமல், தும்மல் மூலம் நிமோனியா காய்ச்சலுக்கு ஆளாகிறான். பிறகு நுரையீரல் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயல் இழுக்க ஆரம்பிக்கும். பன்றி காய்ச்சலுக்கு டேமி புளு மாத்திரை எடுத்துக்கொண்டால் நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என்று ஆங்கில மருத்துவர்கள்

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி

புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது. "பி53' என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறை

மன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், மன்மதன் அம்பு குறித்து உலகநாயகன், கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் நிகழ்த்திய உரை. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். கண்டு மகிழுங்கள்

சுகி சிவம் அவர்கள், போட்டிப்போடுதல் குறித்து – வீடியோவில்

ஆன்மீக சொற்பொழிவில் தனக்கென தனி முத்திரைப் பதித்து வரும் திருவாளர் சுகி சிவம் அவர்கள், போட்டிப்போடுதல் குறித்து சன் டிவி, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அருளுரை கேட்டு, பார்த்து, பயன்பெறுங்கள்