இந்தியாவில், தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பது செலவு கூடிய விஷயம் என்ற நிலையில், இந்திய மாணவர்கள் சீனாவை நோக்கி செல்வது அதிகரித்துள்ளது.
இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற, சில மாநி லங்களில் மதிப்பெண் முறையும், பல இடங்களில் நுழைவுத்தேர்வு ம் பின்பற்றப்படுகின்றன. இவைகளில் வெற்றிபெற முடியாத மாண வர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நாடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆனால், அங்கே ஆகும் செலவு பலரையும் பின் வாங்க வைத்துவிடுகிறது.
மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவையும் கைவிட முடியாமல், செலவையும் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் இந்திய மாணவ ர்களுக்கான ஒரு சிறந்த இலக்காக அண்டை நாடான சீனா உருவெ டுத்துள்ளது. இந்தியாவில் ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க, கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை என்ற வகையில், சுமார் 45முதல் 75 லட்சம்வரை செலவாகிறது. ஆனால் சீனாவி லோ, ஒரு அரசு