
பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே!
பட்டாசு வெடிக்கும் குழந்தைகளே!
குழந்தைகளே நாளை தீபாவளி. உங்களது அப்பா அம்மா அல்லது வீட்டு பெரியவர்கள் வாங்கி கொடுத்த புத்தாடை அணியவும், இனிப்புகள் சுவைக்கவும், பட்டாசு வெடிக்கவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கீறீர்கள் அல்லவா?
மகிழ்ச்சியாக கொண்டாடும் தீபாவளியில் நீங்கள் பட்டாசு வெடிக்கும் போது எந்த விதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள சில முன்னெச்சரிக்கை பற்றிய பதிவே இது!
பட்டாசு வெடிக்கும் முன்பு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள்
பொது இடத்தில் வெடி வெடிக்கும்போது அங்கு மின் கம்பிகள், குடிசைகள், காகிதக் குப்பைகள், பட்டாசு கடைகள், மண்ணெணெய் கடை, பஞ்சு மூட்டை, ஆடையகம் போன்ற பகுதிகளில் வெடி வெடிக்கக் கூடாது. மீறி இதுபோன்ற பகுதிகளில் வெடிகளை வெடிக்கும் பட்சத்தில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு அதீத உயிர்ச்சேதங்களும் ஏற்படும் அபாயம் உண்டாகும். வெட