ஒருமுறை மகாபெரியவரின் தரி சனத்திற்காக காஞ்சி மடத்தில் பக்தர்கள் கூடியிருந்தனர். பெரி யவர்வந்து அமர்ந்தவுடன் வழக்கம் போல் எல்லோரும் வரிசையில் சென்று வந்தனம் செய்து அவரிடம் ஆசி பெற்றுச் சென்று கொண்டிருந் தனர். அப்போது ஒரு ஓரமாக முக் காடிட்ட விதவைப் பாட்டி ஒருவர் நிற்பதை கவனித்த பெரியவர், அருகிலிருந்த சிஷ்யன் ஒரு வனைக் கூப்பிட்டு, இந்த பாட்டி சுமங்கலியா என்று கேட்டு வந்து சொல் என்றவுடன் அந்த சிஷ்யன் பேந்தப் பேந்த விழித்தான்.
முக்காடு போட்டிருக்கும் பாட்டி யை சுமங்கலியா என்று எப்படிக் கேட்பது என்று திகைத்தான்! ஆனால் பெரியவர் விடவில்லை; அவனை விரட்டிக் கொண்டே இருந்தார். உடல் நடுங்க, மிக்க தயக்கத் துடன் அவன் அந்தப் பாட்டியை அணுகி, ""தாங்கள் சுமங்கலியா என்று (more…)