
கொசு – உலகின் அபாயகரமான பூச்சி – கின்னஸ்
கொசு - உலகின் அபாயகரமான பூச்சியினம் - கின்னஸ் அதிரடி
உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு. மனிதன், பூமியைத் தாண்டி ஆய்வுகளை மேற்கொண்டு வெறறி பெற்றிருக்கிறான். ஆனால், இந்த கொசுக்களை ஒழிப்பதிலோ அல்லது கட்டுப் படுத்துவதிலோ அவனால் முழுமையாக வெற்றி பெற இயல வில்லை. அந்த கொசுக்கள் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் இதோ
2.5 மில்லி கிராம் எடை கொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47. மழை கொட்டும் போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு.
ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அது தான் நீங்கள் கேட்கும் ரீங்காரம்.
சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன.
கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும்.
ஒரு கொசு, முட்டையிலிருந்