
கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க
"கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க "
என்னது கொரோனாவுக்கு நன்றி சொல்லனுமா, ஏன்யா, உலகமே கொரோனாவை கண்டு அலறி, பதறித் துடித்துக் கொண்டு, அந்த வைரஸை உலகத்தைவிட்டே விரட்ட போராடிக் கொண்டிருக்கும் போது நீங்க என்னடானா கொரோனாவுக்கு கோடி நன்றி சொல்லுங்க என்று சொல்வது நியாயமா? மனசாட்சி இருக்காயா உங்களுக்கு என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது. தயவுசெய்து இந்த கட்டுரையை முழுமையாக படித்தால் கண்டிப்பாக ஆமாம்ப்பா சொல்வது சரிதான் என்று சொல்வீங்க.
அந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா என்ற பெயர் கொண்ட நுண்ணுயிரால் இன்று உலகம் முழுக்க இயற்கை தன்னைத் தானே புனரமைத்துக் கொண்டு வருவதோடு, மனிதர்களுக்கு அவரவர்களின் உறவுகளின் உன்னதங்களை உணர வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் இயற்கை மனிதர்களுக்கு ஒரு தனிமையை உருவாக்கி, வீட்டில் முடக்கிப்போட்டு ‘இந்த குடும்பம்தான் உனது உலகம்’ என்ற உண்மையை புரிய வைத்