Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கோட்டு வாத்தியம்

மனதை மயக்கிய கோட்டு வாத்தியக் கலைஞர் ரவிகிரண்

அண்மையில் கொரட்டூர் கல்சுரல் அகடமியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், சித்திர வீணை ரவிகிரணின் கோட்டு வாத்திய இசை நிகழ்ச்சி மனதை கொள்ளை கொண்டது. இசையில் உலகப் புகழ் பெற்றுள்ள ரவிகிரண், குழந்தை மேதை யாக இசைத் துறையில் ஒளி வீசத்துவங்கி, இன் று, "சங்கீத சாம்ராட்' ஆக முடிசூட்டிக் கொண்டிரு க்கிறார் என்பதற்கு, இவ ருடைய கடும் உழைப்பு, இசைத் தேடல் முயற்சி முக்கிய காரணம். இவற் றுடன் மூத்த கோட்டு வாத்தியக் கலைஞர் அம ரர் நாராயண அய்யங்காருடைய பேரன் என்பதும் குறிப்பிடத்தக்க உண்மை. நிகழ்ச்சியின் ஆரம்பமே அமர்க்களமான விருந்து செவிகளுக்கு கன நவராக பஞ்சகமாக நாட்டை, கவுளை, வராளி, ஆரபி, ஸ்ரீராகம், நாராயண கவுளை போன்ற ராகங்களை இழைத்து நயமாக வாசித்த வர்ணம் மிகச் சிறப்பாக, எடுப்பாக அமைந்திருந்தது. அபூர்வமாக இந்த நிகழ்ச்சியில் ரவிகிரண் வாசித்த கைகவசி ராக விரிவுகள் படு மதுரமாக இருந்தன. ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுடைய