
பெண்களே உங்கள் முகத்தை துப்பட்டாவால் மறையுங்கள் – நடிகை ராஷ்மி
பெண்களே உங்கள் முகத்தை துப்பட்டாவால் மறையுங்கள் - நடிகை ராஷ்மி
உலகம் முழுக்க இன்று கொரோனா தாண்டவமாடி வருகிறது. அதனை தடுக்க வழியில்லாமலும் அதிலிருந்து தப்பிக்கவும் உலக மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக விதிக்கப்பட்டு, கொரோனா நோய்த் தொற்றை பரவாமல் இருக்க சமூக விலகலை பின்பற்றி வருகின்றன•
இந்நிலையில் இந்தியாவிலும் 15 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆகவே கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டு நாடே முடங்கி கிடக்கிறது. அரசின் உத்தரவை மதித்து சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். இதில் சிலர் மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக நல்ல ஆலோசனைகளையும் தருகின்றனர். யோகிபாபுவுடன் ‘காக்டெய்ல்’ மற்றும் சி.வி.குமார் தயாரிப்பில் ஒரு புதிய படம் ஆகிய படங்களில் கதாநாயகிய