Sunday, March 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: கோரிக்கை

இண்டர்நெட்டில் உலாவரும் அபிஷேக்சிங்வி செக்ஸ் வீடியோ

இண்டர்நெட்டில் உலாவரும் அபிஷேக்சிங்வி செக்ஸ் வீடியோ: தடை செய்ய காங்கிரசார் கோரிக்கை காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் டாக்டர் அபிஷேக்சிங்வி (53).  மேல்- சபை எம்.பி.யான இவர் இந்தியா வில் உள்ள தலைசிறந்த வக்கீல் களில் ஒருவர். இவரது மனைவி அனிதாசிங்வி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்   அபிஷேக் சிங்வியின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத் பூர். இவர் தாக்கல் செய்த சொத் துக் கணக்கு பட்டியலில் தனது ஆண்டு வருமானம் ரூ.50 கோடி என்று குறிப்பிட்டிருந்தார்.   இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அபிஷேக் சிங்வி டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள அவரது அறையில் இன்னொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற 'செக்ஸ்' வீடியோ ஒன்று 'யு டியூப்' உள்ளிட்ட (more…)

கணவர் மிரட்டலில் இருந்து காக்க உயர் அதிகாரி மனைவி கோரிக்கை

பிரிட்டனுக்கான இந்திய ஹை கமிஷனில் பணியாற்றும் இந்திய உயரதிகாரி ஒருவரின் மனைவி, கணவரின் அச்சுறுத் தலுக்குப் பயந்து தன் ஐந்து வயது மகனுடன் தலை மறை வாகி விட்டார். தொடர்ந்து பிரிட்டனில் தங்கி யிருப்பதற்கு அனுமதியளிக்கும் படியும், தனக்கு பாதுகாப்பு கோரி யும் அந்நாட்டு அரசுக்கு அவர் கடிதம் அனுப்பி யுள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனில் வர்மா. இவர், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனில் (more…)

பிரதமர் அறிவுரைகளை ராஜா பின்பற்றவில்லை: சுப்ரீம்கோர்ட்

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்‌மோகன் சிங்கின் பரிந்துரைகளை முன்னாள் மத்திய அமைச்சார் ஆ. ராஜா  பின்பற்றாதது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி கேட்டுள்ளது. அதோடு நில்லாமல் சட்ட அமைச்சகத்தின் தகுந்த‌ ஆலோசனைகளுக்கு ராஜா செவி சாய்க்காமல் செயல்பட்டிருக்கிறார் என்றும் ராஜாவின் இத்தகைய நடவடிக்கைகள் அமைச்சரவையில் கூட்டு பொறுப்பு என்ற கொள்கைக்கே புறம்பானதாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கமளித்த சொலிசிடர் ஜெனரல், பிரதமரின் கருத்துக்களுக்கு அமைச்சர் ராஜா அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்காதிருந்த்தே இப்பிரச்சனைக்கு காரணம் என்றார். இதுதொடர்பாக வந்த புதிய செய்தி

ப‌ணப் பட்டுவாடா மற்றும் வன்முறைகளை தடுக்க தேர்தல் அணையரிடம் தமிழக கட்சியினர் வலியுறுத்தல்

தமிழக சட்டசபை தேர்லில் வன்முறைகள் இல்லாத அளவிற்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், பணப் பட்டுவாடா தடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்களை தேர்தல் கமிஷனிடம் தமிழக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இத்துடன் ஒரு கட்ட தேர்தல் தமிழகத்திற்கு நல்லது என்றும் வலியுறுத்தப்பட்டன. வரவிருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பாக மத்திய தேர்தல் துணை கமிஷனர் ஜெயபிரகாஷ், சட்ட ஆலோசகர் மென்டி ரெட்டி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஆகியோர் அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினர். அனைத்து அரசியல் கட்சி சார்பில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் தேர்தல் அதிகாரியை தனித்தனியாக சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. முதன்முதலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மகேந்திர வர்மன், கல்யாணசுந்தரம் ஆகியோர் சந்தித்து கருத்துக்களை தெரிவித்தனர். இதனையடுத்து பா.ஜ., சார்பில் மாநில துணை தலைவர் தமிழிசை சவு

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்கட்சிகள் பொது விவாதம் நடத்த ஒத்துழைக்க வேண்டும். மம்தா பானர்ஜி

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் தொடர்பாக பாராளுமன்ற‌ கூட்டு விசாரணைக் குழுவை தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என எதிர்கட்சிகள் பிடிவாதமாக இருக்கும் நிலையில் திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி,  காங்கிரஸ் அரசின் வேண்டுகோளுக் கிணங்கி, எதிர்கட்சி்கள் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பொது விவாதம் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க‌ வேண்டும் என கோரியுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: பாராளுமன்றக் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதால் அதை பாராளுமன்ற கூட்டு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி எதிர்கட்சி்கள் நடத்தி வரும் அமளியால் பாராளுமன்ற‌ நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இன்று 13வது நாளாக முடங்கிய நிலையில் இடதுசாரிகள், அ.தி.மு.க., தெலுங்குதேசம் கட்சி, ராஷ்டிரிய லோக் தள கட்சி எம்.பி.,க்கள் ஜனாதிபதியை சந்தித்து, பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மனு அளித்தனர். அதன்பின் சீதாராம் யெச்சூரி, நிருபர்களுக்கு பேட்டியில், ஜனாதிபதியிடம் அவரது அரசியல் சாசன சக்திகளை பயன்படுத்தி பாராளுமன்றக் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளதாக‌ தெரிவி்த்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் . . .

கர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜை மாற்றவேண்டும் என்ற பாரதீய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். "கர்நாடக மாநிலத்தில் கவர்னர் மேற்கொண்ட நடவடிக்கை சரியா தவறா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரியில்லை என ஆளுநர் கருதினால், அதனை தெரிவிக்கும் உரிமை ஆளுநருக்கு உண்டு.  ஆளுநரை மாற்றுவது, திரும்ப பெறுவது அரசியல் பூர்வமான நடவடிக்கை. அரசியல் கட்சிகள் விருப்பத்திற்கு ஏற்ப இதை மாற்றிக்கொள்ள முடியாது." இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.
This is default text for notification bar
This is default text for notification bar