சன்டிவியில் ஒளிபரப்பான பிரபல தொடர்களில் ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்த தொடர் "மெட்டி ஒலி. தற்போது மறு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இத் தொடரில் அப்பாவியாக வந்து, ரசிகர்களின் பரிதாபத்தை அள்ளிய உமாவை ஒரு திரைவிழாவில் சந்தித்தோம். தற்போது சின்னதிரையில் உங்களைப் பார்க்க முடியவில்லையே என்றதும் மென்மையான குரலில் நிதானமாக பதிலளித்தார்.
உங்களைப் பற்றி?
எனக்கு சொந்த ஊர் கடலூர். பிறந்தது,வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்கிறேன். தற்சமயம் அப்பாவோட பிசினஸ் பார்த்து வருகிறேன். இதைதவிர கேப்டன் டிவியில் ஒரு தொடருக்காகப் பேசி வருகிறேன். ஒப்புதல் வந்த பிறகு அடுத்து என்ன தொடர் என்ற விவரங்கள் தெரியும். மற்றபடி "மெட்டி ஒலி' தொடரும், "மஞ்சள் மகிமை' தொடரும் மறுஒளி பரப்பு செய்யப்பட்டு வருகிறது. வேறு தொடர் எதுவும் தற்போதைக்கு இல்லை. ஒரு சில சினிமா நிகழ்ச்சிகளைத் தொகு