
சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
உங்கள் உடலுக்குள் இருக்கும் சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லா விட்டால் வயிற்று உபாதைகள் பல உண்டாவதோடு முகத்திலும் பருக்கள் அதிகளவில் தோன்ற ஆரம்பிக்கும். இதுபோன்ற பருக்களால் உங்கள் சருமமானது அதன் அழகை படிப்படியாக இழுந்து காண்பதற்கே சலிப்பு ஏற்படும் விதமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது. இதுபோன்ற பாதிப்புக்கள் ஏற்படாமல் இருக்க, ஓர் எளிய வழிமுறையை பின்பற்றினால் இதிலிருந்து தப்பிப்பதோடு ஆரோக்கியத்தோடு அழகையும் பேணி பாதுகாத்திடலாம்.
தினமும் அதிகாலையில் தண்ணீரை நிறைய குடித்து வந்தால் குடலியக்கமானது சீராக நடைபெறுவதால், குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. முகத்தில் பருக்கள் தொந்தரவும் இருக்காது. உங்கள் சரமம் கூடுதல்பொலிவுடன் உங்கள் அழகு மிளிரும்.
அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிற நன்மைகளையும் இங்கு காண்போம்.