இரை தேடச்சென்ற இடத்தில் தற்செயலாக இரு ஓணான்கள் சந்தித்துக் கொண்டன.இரண்டும் உலக விஷயங்கள் குறித்தும், தங்களுடைய வாழ்க்கை பற்றியும் பேசிக் கொண்டிருந்தன. "என்ன பிறப்பு இது? ஏதோ சாப்பிடுகிறோம்,சுற்றுகிறோம், தூங்குகிறோம். இதெல்லாம் ஒரு வாழ்வா? நமக்கென்று ஒரு பெயர் உண்டா? மரியாதை உண்டா? இல்லை நம்மைப்பற்றி யாராவது பெருமையாகப் பேசுகிறார்களா? ஒன்றுமே கிடையாது. புள்ளிமானாகப் பிறந்திருந்தாலாவது ராஜாவின் தோட்டத்தில் சுற்றித் திரியலாம். நம்மை நன்கு கவனித்துக் கொள்வார்கள். வேளாவேளைக்கு உணவு கிடைக்கும். இப்படி காடு முழுக்க சுற்றித்திரிய வேண்டிய அவசியமில்லை'' என அலுத்துக் கொண்டது ஒரு ஓணான். இப்படி அது பேசிக்கொண்டிருக்கும்போதே, இரண்டு வேட்டை நாய்கள் ஒரு புள்ளிமானை துரத்திக் கொண்டு வந்தன. உயிர் பிழைக்கும் ஆசையில் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தது புள்ளிமான். இருந்தாலும் வேட்டை நாய்கள் அதைப் பிடித