தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர் களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித் திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியா வது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்) விடம், தேவர்கள் முறையிட்டிருக்கின்ற னர்.
மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவி த்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங் களையும், வாகனங்களையும் அளித்தனர். தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்கள், சண் டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப்பது மையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற் றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒரு வரைத் திருமணம் செய் து கொள்ளும்படி வற்புறுத்தினர். அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, "யார் என