கர்ணன், துரியோதனனை காண வந்திருந்த சமயம் அங்கு துரியோ தனன் இல்லை. அதனால் அங்கு இருந்த துரியோதனனின் மனைவியுடன் ""சொக் கட்டான்"" விளையாடிக் கொண்டிருந்தா ன். அந்த ஆட்டத்தில் கர்ணன் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. துரியோதனனின் மனைவி தோற்கும் நிலையில் இருந்தாள். அத்தருணத்தில் துரியோதனன், இவர்கள் விளையாடிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தான். இவன் நுழைவதை பார்த்த துரி யோதன்னின் மனைவி சட்டென்று
எழுந்து அவனை நோக்கி ஓட,
விளையாட்டின் மீதே அதீத கவனத்தில் இருந்த கர்ணன் துரியோதனன் வரவை பார்க்காமல், "எங்கே ஓடுகிறாய், தோற்று விடுவோமோ என்ற பயமா?" என்று சொன் னபடி, துரியோதனனின் மனைவியின் இடுப்பில் கட்டி இருந்த மணியை பிடித்து இழுத்தான்.
அடுத்த கணமே! கர்ணன் தான்செய்த அறியா தவறை எண்ணி அஞ்சி நடுங்கினான். துரியோதனனின் மனைவியும் (more…)