Tuesday, July 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: செ‌ன்னை‌

8 வழிச்சாலை –  தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்ச்சியில் தமிழக அரசு

8 வழிச்சாலை – தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி – அதிர்ச்சியில் தமிழக அரசு

8 வழிச்சாலை - தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து சரமாரி கேள்வி - அதிர்ச்சியில் தமிழக அரசு 8 (எட்டு) வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து சரமாரியாக கேள்விகளையும் கேட்டு தமிழக‌ அரசையும் முதல்வர் எடப்பாடியாரையும் அதிர்ச்ச்க்கு உள்ளாக்கியுள்ள‍து. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 276 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை-சேலம் இடையே 8 (எட்டு) வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன

காங்கிரசார் மறிய‌ல்: ராஜீவ் காந்தி சிலை‌க்கு செரு‌ப்பு மாலை

செ‌ன்னை‌யி‌ல் மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ர‌ா‌ஜீ‌வ் கா‌ந்‌தி ‌சிலை‌க்கு செரு‌ப்பு மாலை போ‌ட்டு அவம‌தி‌த்ததாக கூ‌றி இளைஞ‌ர் கா‌ங்‌கிர‌சா‌ர் ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டன‌ர். சென்னை கோடம்பாக்கம் மலர் ஹவுசில் இருந்து அசோக்பில்லர் செல்லும் சாலை அருகே ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலை இருக்கிறது. நேற்‌றிரவு யாரோ இந்த சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்துள்ளனர். இது ப‌ற்‌றி தகவல் அறிந்ததும் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்பட ஏராளமான காங்கிரசா‌ர் ராஜீவ் காந்தி சிலை அருகே இ‌ன்று திடீரென்று சாலை‌ மறியலில் ஈடுபட்டனர். தகவ‌ல் அ‌றி‌ந்து ‌நிக‌ழ்‌விடத்திற்கு ‌விரை‌ந்து வந்த காவ‌ல்துறை‌யின‌ர் காங்கிரசாரை சமாதானப்படுத்தி மறியல் கைவிட‌ச் செ‌ய்தன‌ர். thanks webdunia