Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: சொத்து

தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா

தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா

தூசி பட்டா - அது என்னங்க தூசி பட்டா முதலில் பட்டா என்றால் என்ன‍ என்பதை பார்ப்போம். பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர். பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும். கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும். இந்த பட்டா பல வகைப்படும். அதில் ஒன்றுதான் இந்த தூசி பட்டா ஆகும். இந்த தூசி பட்டா குறித்த தகவல்களை இங்கு காண்போம். கிராம கணக்கில் 2 ம் எண் புத்த‍கத்தில் “C” பதிவேட்டில் குறிப்பிட்டுக் கொடுக்கும் பட்டாதான் 2C பட்டா ஆகும். ஆனால் நாளடைவில் அது மருவி அது தூசி பட்டா என்று பெயர் பெற்ற‍து. அதாவது அரசு நிலத்தில் உள்ள‌ புளியமரங்கள், பனை மரங்கள், பழ
சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்

சொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்

ஒரு சொத்தை தானம் கொடுக்கும்போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப்பட்டிருந்தால்.. வினா:- என் பெயர் ராகவன். நான் சிதம்பரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. பூர்வீக சொத்திலிருந்து பாகப் பிரிவினை மூலமாக ஒரு வீடு மற்றும் மூன்று ஏக்கர் விவசாய நிலமும் என் தந்தைக்குக் கிடைக்கப்பெற்றது. அவருடைய காலத்திற்குப்பிறகு நான் அவருடைய ஒரே வாரிசு என்ற முறையில் அந்த சொத்துக்கள் அனைத்தும் எனக்குக் கிடைத்தது. பின்னர் அந்த சொத்துக்களை நான் என்னுடைய வாரிசுகளான ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர்களுக்குத் தானமாகக் கொடுத்து சொத்தின் முழு அனுபவ உரிமையினையும் அன்றைய தேதி முதலே ஒப்படைத்து விட்டேன். இந்நிலையில், நான் உயிரோடு இருக்கும் போதே என்னுடைய மனைவி அவளுடைய காலத்திலேயே அவளுக்குக் கிடைத்த பாகசொத்தை அவள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் பிரித்துக்கொடுக்க முடியுமா? அல்லது அந்த சொத்தை மீண்
என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?

என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன?

என் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா? தீர்வு என்ன? வினா:- எனது மாமனார் பெயர் மாயாண்டி அவர் கடலூர் மாவட்டம் கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவிசாயி. அவருக்கு இரண்டு திருமணமான மகள்கள் உண்டு. அவருக்குப் பூர்வீகபாத்தியமாக கிடைக்கப்பெற்ற இரண்டு ஏக்கர் நிலத்தை அவருடைய இரண்டு மகள்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தானப் பத்திரத்திரம் தயார் செய்து அதன் அனுபவ உரிமை முதற்கொண்டு அன்றைய தேதியிலேயே பிரித்துக்கொடுத்து விட்டார். ஆறு மாதங்கள் கடந்த பின்னர் அவரது இரண்டாவது மருமகன் மாமனாரை வற்புறுத்தி அந்த தானப்பத்திரத்தை ரத்து செய்யச் சொல்லியதோடு அன்றைய தினமே அனைத்து சொத்துக் களையும் ஒரு விழுக்காடு முத்திரைத் தாள் கட்டணமும் ஒரு விழுக்காடு பதிவுக் கட்டணமும் செலுத்தி இரண்டாவது மருமகன் தன் பெயரிலேயே வற்புறுத்தி SETTLEMENT செய்து வாங்கிக் கொண்டுவிட்டார். நான் முதல் மருமகன். என் மனைவ
தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்

தானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்

தானப் பத்திரம் - வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம் வினா:- நான் ஒரு செல்வந்தர். எனக்கு நிறைய வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்கள் உள்ளன. அவற்றின்மூலம் கிடைக்கும் வருமானம், அரசு அனுமதிக்கும் வருமான வரம்பிற்கும் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், நான் எனக்குச் சொந்தமான நாற்பது லட்ச ரூபாய் மத்திலுள்ள ஒரு வீட்டை என்னுடைய மகனுக்குக் கிரயம் செய்து கொடுத்தால் மேலும் வருமான வரம்பு அதிகமாவதால் வரி குறைப்பிற்காக என்னுடைய மகனுக்கே அவருடைய அனுமதி இல்லாமல், (முந்தைய சட்டப்படி சொத்து பெறுபவர் நேரில் வரவேண்டாம் என்ற நிலை இருக்கும்போது) தானப்பத்திரம் எழுதி பதிந்து விட்டேன். இந்நிலையில் (மகன்) தன்னுடைய தந்தையின் சொத்தில் தனக்கு எந்தவித பாகமும் பெற விரும்பாத காரணத்தினாலும், அவருடைய வியாபார வருமானமே வருமான வரம்பிற்கு அதிகமாக இருப்பதாலும், மேற்கண்ட தான சொத்தை என்னுடைய மகன் ஏற்க மறுக்கின்றார். இந்த நடவடிக்
கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?

கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா?

கொடுத்த விடுதலை பத்திரத்தை மீண்டும் திரும்பப் பெற முடியுமா? ஒருவர் தன் பெயரில் இருக்கக்கூடிய பூர்வீக சொத்துக்களாக இருந்தாலும், அல்லது தன்னுடைய சுயசம்பாத்திய சொத்துக் களாக இருந்தாலும் தன்னுடைய காலத்திலேயே தன்னுடைய வாரிசுதாரர்களில் யாரேனும் ஒருவரையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களையோ நீக்கிவிட்டு, மீதம் உள்ளவர்களுக்கு சொத்துக்களை எழுதிக் கொடுக்க நினைக்கும் தருணத்தில், சொத்து கொடுக்கப்படாமல் விலகிவிடும் நபர்களிடமிருந்து அவர்களுக்கான பாகத்திற்கு ஈட்டுத்தொகைக் கொடுத்துவிட்டு ,அவர்களிடமிருந்து எழுதி பதிவு செய்து கொள்ளும் ஒரு ஆவணமே விடுதலைபத்திரம் என்று சொல்லப்படுகின்றது. அப்படி ஒருவர் ஈட்டுத்தொகை வாங்கிக்கொண்டு விடுதலைப் பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு அவற்றின் அனுபோக பாத்தியமும் கொடுத்துவிட்டால், அந்த சொத்தை மீண்டும் பெற இயலாது. ஆனால் ஈட்டுத்தொகை கொடுக்காமல் ஏமாற்றப் பட்டிருந்தால் நீத
சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது

சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது

சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது கேள்வி (1) - என் பெயர் சதீஷ்குமார் எம்., நான், எனது நிலத்தில் வீடு கட்டி உள்ளேன் இதில் தெருவுக்கான இடத்தை ஒதுக்கி உள்ளேன். எனது வீட்டிற்கும் தெருவின் சிமென்ட் சாலைக்கும் இடையில் மூன்று வீடுகள் உள்ளது, அவர்களும் இதே போன்று தெருவுக்கான இடத்தை ஒதுக்கி விட்டு வீடு கட்டி உள்ளனர். ஆனால் யாரும் கிராம பஞ்சாயத்துக்கு என்று பத்திரம் மூலமாக எழுதி தரவில்லை. எனது வீட்டுக் கடன் தேவைக்காக இது தெருவிற்காக விடப்பட்டுள்ள வழிதான் என்று கிராம நிர்வாக அலுவலர் சான்று வழங்கி உள்ளார். அவர் இச்சான்று அளிக்க சட்டத்தில் ஏதேனும் வழி இருந்தால் அல்லது ஏதேனும் அரசு ஆணை இருந்தால் அதன் தகவலை கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். சரியான தீர்வு உங்களைப்போல் பல நபர்களின் மனக்குமுறல்களையும் என் கவனகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக வே நான் எழுதிய “தெரிந்ததும்
ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்

ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்

ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம் ஒருவருக்கு விற்ற அதே சொத்தை மீண்டும் வேறு ஒருவருக்கு விற்றது சட்டப்படி குற்றம். இதற்காக முதலில் அந்த சொத்தை வாங்கியவர் காவல் நிலையத்தில் விற்றவர்மீது சட்டரீதியான‌ நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கலாம். மேலும் சொத்தை விற்றவர் இரண்டாவதாக வேறு நபருக்கு எழுதிப் பதிவுசெய்து கொடுத்துள்ள விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முதலில் வாங்கியவர் மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களிடம் புகாராக‌ அளிக்க வேண்டும். மேற்படி விற்பனை ஆவணம் ரத்து செய்யப்பட்ட பின்னர், பட்டா பெறாமலிருந்தால், வட்டாட்சியரிடம் மனு செய்து அதை முதலில் வாங்கியவரது பெயரில் பட்டா விண்ணிப்பித்து பட்டா பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு சொத்தின் சுவாதீனம் யாரிடம் உள்ளது என்பதற்கு பட்டா போன்ற வருவாய்த்துறை ஆவணங்களே முக்கிய சான்றுகளாகும். கிரைய ஆவணங்கள் உ
அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு… அரசாங்கத்தின் முக்கிய அரசாணைகள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமான அரசாணைகள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை படித்து, சரியான தருணத்தில், சம்பந்தப்பட்ட வரிடம் சொல்லி நினைவூட்டலாம். (1) பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தால் ஒழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக் கூடாது (RG. 1984.P.278)   (2) கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)                                               (3) அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அ
கணவர் இறந்த பிறகு 2வது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா?

கணவர் இறந்த பிறகு 2வது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா?

கணவர் இறந்த பிறகு இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு உண்டா? இரண்டு மனைவிமார்கள் இருக்கும் கணவர் இறந்த பிறகு அவரது சொத்தை பங்கு பிரிக்கும் போது இரண்டாம் மனைவிக்கு தனியாக பங்கு ஒதுக்க வேண்டுமா என்ற கேள்வி எழும். இந்து திருமண சட்டப்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாம் திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டப்படி இரண்டாம் திருமணத்தின் மூலம் குழந்தைகள் பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு தந்தையின் சொத்தில் பங்கு உண்டு. ஒரு நல்ல வழக்கறிஞரின் துணையோடு இதுகுறித்து வழிகாட்டினால் நலம் பயக்கும். #இரண்டாவது_மனைவி, #மனைவி, #தாரம், #சொத்து, #திருமணம், #சட்டம், #நீதிமன்றம், #குழந்தை, #துணைவி, #பொண்டாட்டி, #சம்சாரம், #உயில், #செட்டில்மெண்ட், #விதை2விருட்சம், #Second_Wife, #2nd_Wife, #Wife, #Life_Partner, #Property, #Wedding, #Marriage, #Matrimony, #Will, #Settlement, #vi
சொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா?

சொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா?

சொத்து விற்றவ‌ர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா? சொத்து கிரையம் முடித்த‍வுடன் பட்டா பெயர் மாற்ற‍த்திற்கு விண்ண‍ப்பத்தின் அதனை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருவேளை சொத்து வாங்கிய உடனேயே பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் செய்வதன் மூலம் இன்னொரு பிரச்சினையையும் சந்திக்க வேண்டிவரும். சொத்தை உங்களுக்கு விற்பனை செய்தவர் இறந்து விட்டால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கு தேவையில்லாத அலைச்சலையும், சிரமத்தையும் சந்திக்க வேண்டி வரும். இறந்தவருடைய இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் தேவைப்படும். அதற்கு நீங்கள் சொத்து விற்றவருடைய‌ வாரிசுகளை நாடவேண்டி இருக்கும். அந்த சமயத்தில் வாரிசுகள் ஏதேனும் ஆட்சேபம் தெரிவித்தால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது மேலும் தாமதமாகக் கூடும். எனவே பத்திரப்பதிவு செய்தவுடனேயே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்து அதை வாங்க
எந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த‍த் தேவையில்லை

எந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த‍த் தேவையில்லை

எந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத்தாள் (Stamp Paper ) கட்டணம் (Stamp Duty) செலுத்த‍த் தேவையில்லை அனைத்து அசையா சொத்துக்கள் பரிமாற்றத்திற்கும் முத்திரைத்தாள் (Stamp paper) கட்டணம் (Stamp Duty) செலுத்த வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் உயில் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் சொத்துக்கள் மற்றும் கூட்டுறவு வசதி வங்கி மூலம் விற்பனை செய்யப்படும் சொத்துக்களுக்கும் முத்திரைத்தாள் கட்ட‍ணம் இல்லை. என்கிறார்கள் சட்ட‍ வல்லுநர்கள். => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 98841 93081 #சொத்து, #கிரையம், #ஒப்ப‍ந்தம், #வாடகை, #புரிந்துணர்வு, #தொழில், #வியாபாரம், #முத்திரைத்தாள், #கட்ட‍ணம், #பதிவு, #உயில், #கூட்டுறவு_வசதி_வங்கி, #விதை2விருட்சம், #Property, #Grade, #Contract, #Rental, #Understanding, #Business, #Business, #Stamp, #Payment, #Registration, #Will, #Cooperative #Bank, #Sale, #vidhai2vir
சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன? என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோமே அப்புறம் என்ன? என்று அலட்சியமாக இருந்தால்

சொத்து கிரையம் பதிவுசெய்து விட்டோமே அப்புறம் என்ன என்று அலட்சியமாக இருந்தால் சொத்து கிரையம் பதிவு செய்து விட்டோம், தாலுகா அலுவலகத்திலோ அல்லது வருவாய் துறையிலோ முறைப்படி பட்டா பெயர் மாற்றமும் செய்து விட்டோம் என்று ஹாயாக இருக்காமல், அடுத்தக்கட்டமாக செய்ய வேண்டிய ஒன்று என்னவென்றால், நீங்க‌ள் வாங்கிய சொத்தின் கிரயப் பத்திரத்தின் நகல் ஒன்றினை சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்து, சொத்து வரி பதிவேட்டில் உங்கள் பெயருக்கு மாற்றம் செய்து, உங்கள் சொத்துக்கான வரி விதிப்பை ஏற்றுக்கொண்டு அச்சொத்துக்கான வரியை முறைப்படி த‌வறாமல் செலுத்தி அதன் ரசீதுகளை பத்திரப்படுத்தி வர வேண்டும். காலி நிலமோ, வீடோ எதுவாக இருந்தாலும், அந்த சொத்தின் அளவு, சொத்து அமைந்துள்ள ஊர், மற்றும் அமைவிடம் போன்றவைகளுக் கேற்பவும் சொத்து வரி விதிக்கப்படும். நீங்கள் வாங்கிய சொத்தின் மீது உங்களுக்கு இருக்கும் உர
This is default text for notification bar
This is default text for notification bar