
ஆரிய-திராவிட மோதலில் நீயே பலிகடா? – ஏ இளைய சமுதாயமே!
ஆரிய-திராவிட மோதலில் நீயே பலிகடா? - ஏ இளைய சமுதாயமே!
ஆரியமும் திராவிடமும் வீரியமாக மோதிக் கொள்ளும். காரசாரமாக அறிக்கைகள் பறக்கும், இவர் ஆத்திகமே உயர்வு என்பார். அவர் நாத்திகமே சிறந்தது என்பார். ஒருவருக்கொருவர் ஒருமையில் வசைபாடிக் கொள்வர், தொலைக்காட்சி விவாதங்களில் அனலைத் தெறிக்க விடுவர், பத்திரிகைகளில் சூட்டை பரப்புவர், இவர் இல்லை யென்பார், அவர் உண்டு என்பார். இவர் கேலி செய்தால் அவர் அதனை தட்டிக் கேட்பார்., இவர் தட்டிக் கேட்பதை அவர் கேலிசெய்வார்.
ஆனாலும் நாத்திகர் எடுக்கும் திரைப்படங்களில் ஆத்திகர்கள் நடிப்பர், அதேபோல் ஆத்திகர் நடிக்கும் திரைப்படங்களில் நாத்திகர்கள் நடிப்பர். இவரது இல்லத்து நிகழ்ச்சிகளுக்கு அவருக்கு அழைப்பு உண்டு. அவரது வீட்டு விசேஷங்களுக்கு இவருக்கு அழைப்பு உண்டு. இவரது வியாபாரத்தில் அவரும் ஒரு பங்குதாரர், அவரது வியாபாரத்தில் இவரும் ஒரு பங்குதாரர்.
இவர்களிர