
யாஷிகாவுடன் இப்போ அது வேண்டாம்னு தோணுது – ஐஸ்வர்யா தத்தா
"யாஷிகாவுடன் இப்போ அது வேண்டாம்னு தோணுது" - ஐஸ்வர்யா தத்தா
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள். தொடர்ந்து இருவரும் இணைந்து ஊர் சுற்றி அந்த படங்களை வெளியிடுகின்றனர். இருவரும் இணைந்து நடிப்பார்களா? என்று ஐஸ்வர்யா தத்தாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
’யாஷிகா சூப்பரான படங்கள்ல நடிச்சுக்கிட்டிருக்கா. அவ நடிச்ச 'ஜாம்பி' பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு வந்திருக்கா. நல்ல கதைகள் வந்தா ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கலாம்னு நினைச்சிருந்தோம். ஆனா, இப்போ அது வேண்டாம்னு தோணுது.
காரணம், நாங்க ரெண்டுபேரும் ரொம்ப ரொம்ப நெருக்கமான தோழிகள். ஒரே படத்துல நடிக்கும்போது, போட்டி போட்டு நடிக்க வேண்டி இருக்கும். அது எங்க நட்பை பாதிக்க வாய்ப்பிருக்கு. நாங்க ரெண்டு பேரும் இப்போ இருக்கிற மாதிரி நல்ல தோழி