
ஊரடங்கு நீட்டிப்பு; தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை – தமிழக அரசு அறிவிப்பு
ஊரடங்கு நீட்டிப்பு; தமிழகத்தில் ஜூலை 31-ந்தேதி வரை - தமிழக அரசு அறிவிப்பு
ஜூன் மாத ஊரடங்கு முடியும் தருவாயில் ஜூலை மாதம் 31 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
தமிழக கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை உடனுக்குடன் வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.
அதே நேரத்தில், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த அவ்வப்போது பல்வேறு தளர்வுகளை வழங்கி வருவதுடன், சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய முதலீடுகளை ஈர்த்தும், ஊரகத் தொழில்களை மீட்