தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 8ம் தேதி துவங்குகிறது. தமிழில் படித்தவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் அவசர சட்ட மசோதா உட்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதுடன், விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கு தேவைப்படும் கூடுதல் செலவினங்களுக்காக துணை மதிப்பீடும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதிய சட்டசபையில், 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதுடன், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 19ம் தேதி துவங்கி, மே மாதம் 14ம் தேதி வரை நடந்தது. அதன்பின், சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. மரபுப்படி, சட்டசபை கூட்டம் முடிந்த தேதியில் இருந்து, ஆறு மாதங்களுக்குள் மீண்டும் கூட வேண்டும் என்பதால், நவம்பர் 10 தேதிக்குப்பின், சட்டசபை கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், நவம்பர் 8ம் தேதியே புதிய சட்டசபையில் சட்டச