Sunday, May 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தமிழகம்

தமிழகம்- புதுச்சேரி சட்டசபை தேர்தல்: மார்ச் 1-ந்தேதி அறிவிப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங் களில் முடிகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்ட சபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் கமிஷன் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. 5 மாநிலங்களிலும் தேர்தலை எப்போது நடத்துவது? எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்து வது என்பது பற்றி தலைமை தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி முடித்துவிட்டது. ஓட்டுப்பதிவு நாட்களில் ஏதேனும் (more…)

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களை, இருந்த இடத்தில் அதுவும் இணையத்தில் இருந்தே 360 டிகிரி கோணங்களிலும் காண

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான அரண்மனைகள், கோட்டைகள், கோயில் களை நீங்கள் இணையத்தின் வாயிலாக ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும்.  இந்த வசதியின் மூலம் உங்களின் சுற்றுலாவை கச்சித மாக திட்டமிடமுடியும். இந்த வசதியினை www.view360.in என்ற இனையதளம் இலவசமாக வழங்குகிறது. நீங்கள் உங்களுக்கு வேண்டிய  இடத்தை தேர்வு செய்தவுடன் தோன்றும் படத்தில் “LINKS” என்ற லிங்க் இருக்கும் அதை அழுத்தியவுடன். உங்களுக்கு அந்த இணையத்திற்கு உண்டான தனி லிங்க் கிடைக்கும் .இதற்கு எந்த ஒரு மென்பொருளும் தேவை இல்லை என்பது சிறப்பு (((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

தமிழக சட்டசபை தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி

தமிழக சட்டசபை தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் நிருபர் களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- தமிழகத்தில் 4 கோடியே 59 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்த்துள்ளனர். இன்னும் 23 லட்சம் பேர் தங்கள் பெயரை இன்னும் சேர்க்காமல் உள்ளனர். தமிழகத்தில் தேர்தல்களில் வாக்குப் பதிவு 70 சதவீதம் அல்லது 75 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. எஞ்சியுள்ள (more…)

விவசாயிகள் தற்கொலை: தமிழகத்தில் அதிக எண்ணிக்கை

விவசாயிகளுக்காக மத்திய அரசு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விவசாய கடன்களை ரத்து செய்திருந்தது. ஆனா லும், நாடு முழுவதும் 2009ம் ஆண்டில் மட்டும், 17 ஆயிர த்து 175 விவசாயிகள் தற் கொலை செய்தனர். தமிழக த்தில் அதே ஆண்டில், 1,060 விவசாயிகள் தற்கொலை செய்தனர். அதேபோல தமிழக த்தில் 2009ம் ஆண் டில் மட்டும், 456 மாண வர்கள் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சியின் போது, விவசாயிகளுக்காக அவர்கள் வாங்கியிருந்த ஆயிரக்கணக் கான கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயக் கடன்கள் ரத்து செய் யப்பட்டது. கடன் தொல்லை காரணமாக (more…)

தமிழக போக்குவரத்துகழங்கங்களின் நஷ்டம் ரூ.1000 கோடி: டீசல் பற்றாக்குறை குறித்து அமைச்சர் விளக்கம்

"தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கு கின்றன' என, அமைச்சர் நேரு, சட்ட சபையில் அதிர்ச்சித் தகவலை வெளி யிட்டார். டீசல் பற்றாக் குறை காரணமாக பஸ்கள் இயக்கம் பாதிக்கப்படவில்லை என்று அமைச்சர் விளக்க மளித்தார். தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, போக்கு வரத்துத் துறை தொடர்பாக அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தொடர் கேள்விகளை (more…)

தமிழக எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் சஸ்பெண்ட்; சபாநாயகரை கேலி செய்து எதிர்கட்சியினர் நாடகம்

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சட்டசபை யில் கவர்னர் உரையின் போது பெரும் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்ட 9 அ.தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். வரும் சட்டசபை கூட்டத் தொடர் முழு வதும் 9 பேரும் கலந்து கொள்ள முடியாது என சபா நாயகர் அறிவித் துள்ளார். இதனை கண்டித்து எதிர் கட்சியினர் சபா நாயகரை கேலி செய்யும் விதமாக நாற் காலியில் அமர்ந்து கேலி செய்தனர். கவர்னர் உரையில் கூச்சல்-குழப்பம்: 7ம்தேதி நடந்த சட்ட சபையில் கவர்னர் பர்னாலா கவர்னர் உரை துவங்கியதும் , விலை வாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட (more…)

வேலூர் அதிசயம் – வீடியோவில்

உலக அதிசயங்களை கண்டிருக்கும் நீங்கள் நம்மூரில் அதாவது தமிழகத்தில் உள்ள வேலூரில் உள்ள அதிசயங்களை கேள்விப்பட்டதுண்டா? இதோ வீடியோவில் வேலூரில் உள்ள கோட்டையின் 7 அதிசயங்கள்

மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ 2 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு

தற்போது பெய்துவரும் கன மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்க முதல்வர் கருணாநிதி உத்தர விட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது பெய்துவரும் வட கிழக்குப் பருவமழையினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து,  முதல்வர் கருணாநிதி இன்று புனித ஜார்ஜ் கோட்டையில் ஆய்வு செய்தார்.  பெருமழை காரணமாக நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைகள் தவிர, தமிழகத்தில் உள்ள எல்லா அணைகளும், குளங்களும், ஏரிகளும் பெருமளவுக்கு நிரம்பியுள்ளன.  இதுவரை மதுரை, தர்மபுரி, கடலூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வந்துள்ள தகவலையடுத்து;  நீர் வடிந்ததற்குப் பிறகு பயிர்ச்சேதம் குறித்து மதிப்பீடு செய்து, உரிய நிவாரணம் வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 548 குடிசைகள்

“காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது’ : அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகா முடிவு

"தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது' என, கர்நாடக அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சிக் கூட்டத்தில் நடந்த காரசார விவாதத்துக்குப் பின், இம்முடிவு எடுக்கப் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. "தமிழக விவசாயத்திற்கு, மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்' என, தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிடம் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து, முதல்வர் எடியூரப்பா, சட்டசபை மற்றும் மேலவை அனைத்து கட்சிக் கூட்டத்தை அவரது அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் நேற்று மாலை கூட்டியிருந்தார். கர்நாடக அரசியலில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள், ஒரு மாதமாக, எடியூரப்பாவின் பா.ஜ., ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும் என, கடும் முயற்சி மேற்கொண்டன. மூன்று கட்சித் தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் அறிக்கை விடுவதும், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர். இந்நி

தந்தை பெரியார் அவர்களின் அயல்நாடு சுற்றுப்பயணம் (1929-1932)

பெரியார் ரஷ்யசுற்றுபயணத்தின்பொழுது 1929 இல் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேயாத் தமிழர்களின் அழைப்பை ஏற்று மனைவி நாகம்மாளுடன் கப்பலில் ஏறி மலேயாச் சென்றார் அங்கு சுமார் 50000 மக்களுக்கு மேற்பட்டுத் திரண்டு வரவேற்ற மக்களிடையே சுயமரியாதை கருத்துக்களை விளக்கிப் பேசினார். தைப்பிங், மலக்கா, கோலாலம்பூர், கங்கைப்பட்டாணி போன்ற இடங்களிலும் சென்று தமது கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். பின் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு டிசம்பர் 1931 இல் சக சுயமரியாதையாளர்களான எஸ்.ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். எகிப்து, கிரிஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு 3 மாதம் வரை பயணம் மேற்கொண்டார். இந்த பயணங்களின் முடிவில் இந்தியா திரும்பும் வழியில் இலங்கைக்கும் பயணம் செய்தபின், 1932 நவம்பர

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்

முதன்மைக் கட்டுரை: சுயமரியாதை இயக்கம் சுயமரியாதை இயக்கத்தின துவக்க காலத்தின் பொழுது பெரியார் பெரியார் மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்க கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பல்ர் இந்தியாவின் விடுதலைக்காக போராடிவந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர். சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில் பிரமணரல்லாதோர் தாம் பழம்பெரும் திராவிடர்கள் என்றப் பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது. சுயமரியாரியாதை இயக்கம் 1925 இல் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கை பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திக்குரிய மூடபழவழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதை தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையினிருந்து மீட்டெடுக்கவும், த