
பிக்பாஸ் ஷெரின் எழுதி கிழித்த அந்த கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா?
பிக்பாஸ் ஷெரின் எழுதி கிழித்த அந்த கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா?
பொதுவாக எல்லோரும் படித்துத்தான் கிழிப்பார்கள். ஆனால் பிக்பாஸ் ஷெரின் எழுதி கிழித்து இருக்கிறார். பிக்பாஸ் 93 நாட்களைக் கடந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டுக்கு விருந்தினர்களாக கடந்த சீசன் போட்டியாளர்கள் மகத்தும் யாஷிகாவும் வருகை தந்தனர். அப்போது ஷெரினிடம் யாஷிகா, "உங்களுக்குப் பிடித்த போட்டியாளர் யாரேனும் ஒருவருக்கு நீங்கள் எதாவது எழுதுங்கள்"' என்று தெரிவித்தார். உடனே தனது படுக்கைக்கு ஓடிச் சென்று அங்கு அமர்ந்து, தர்ஷன் பற்றி எழுதினார் ஷெரின். இதனை அவர் யாருக்கும் காட்டாத நிலையில், கேமரா மட்டும் நன்றாக படம் பிடித்துள்ளது.
”மேகமூட்டமான நாளில் நீ என் சூரிய ஒளி, நான் சொல்ல விரும்புவது நிறைய இருக்கிறது. எனது இருண்ட பகுதிகளை நீதான் ஒளிரச் செய்கிறாய்” என்று ஷெரின் எழுதியது இணையத்திலும் வைரலாகி உள்ளத