கர்நாடக வளர்ச்சிக்காக முதல்வர் எடியூரப்பா நாள்தோறும், 18 முதல், 20 மணி நேரம் பாடுபடுகிறார். எனக்கும், அவருக்கும் இடை யில் எந்தவித பிரச்னையும் இல்லை,'' என, கர்நாடக கவர் னர் பரத்வாஜ் தெரிவித்தார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த வழக் கில், அவர்களுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு, கர்நாடக அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. 11 எம். எல்.ஏ.,க்களும், முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித் தனர். இந்த தகவலை கவர்னர் பரத்வாஜிடம் தெரிவிக்கச் சென்ற போது, அவர்களை பார்க்க கவர்னர் மறுத்து விட்டார். அன்று இர வோடு இரவாக கர்நாடக பா.ஜ., அரசை கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு கவர்னர் பரத் வாஜ் கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தால், கர்நாடக பா.ஜ., தலைவர்கள் கடும் கோபமடைந்து போராட்டம் நடத்தினர். டில்லி சென்று ஜனாதிபதி முன், 114 எம்.எல்.ஏ.,க்களை