Wednesday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தினமணி

விட்ட‍து தொடர்கிறது! அந்த‌ நெகிழ்ச்சியில் நான்

விட்ட‍து தொடர்கிறது! அந்த‌ நெகிழ்ச்சியில் நான். . . விட்ட‍து தொடர்கிறது! அந்த‌ நெகிழ்ச்சியில் நான். . . ரங்கராஜன் ஆகிய நான், படித்து முடித்து வேலை தேடிய காலங்களில் (more…)

நூல்கள் எனக்கு அறிமுகம், அதன்பிறகே என் முகம் சமூகத்திற்கு அறிமுகம்

நூல்கள் எனக்கு அறிமுகம், அதன்பிறகே என் முகம் சமூகத்திற்கு அறிமுகம் நூல்கள் எனக்கு அறிமுகம், அதன்பிறகே என் முகம் சமூகத்திற்கு அறிமுகம் என்னுடைய 7 வயதில் கை, கால் மூட்டுகளில் வலி அதனை வாலாஜாபாத் என்ற (more…)

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள்

கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்ப‍டி? தினமணி நாளிதழ் வெளியிட்ட‍ தந்திரங்கள் க‌டந்த 8ஆம் தேதி அன்றிரவு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவி ப்பினால் ஏராளமான (more…)

இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள்

இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள் இன்றைய மண‌ப்பெண்களின் எதிர்பார்ப்பு குறித்து தினமணி வெளியிட்ட‍ ஆச்சரியத் தகவல்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதெல்லாம் அந்தக் காலம், இப்போதெல்லாம் (more…)

முன்னுதாரண முதல்வர்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம் ஓரு மாநிலத்தில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமையும் என்றால், அந்த மாநிலத்தில்  ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு வானத்தின் கீழ் உள்ள எல்லா சலுகைகளும் கிடைத்து விடுகின்றன என்பது இன்றைய அரசியல் தலையெழுத்தாக இருக்கும்போது, பிகார் மாநிலத்தில், இந்தியாவே அதிசயப்படும் வகையில் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் முதல்வராக நிதீஷ்குமார் பதவியேற்ற போதிலும், அவர் செய்திருக்கும் முதல் பணி எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்திருப்பதுதான். கடந்த ஆட்சியிலும் தானே முதல்வராக இருந்துள்ள நிலையில், எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் ஊழல் நடப்பதால் இதை ரத்து செய்கிறேன் என்று சொன்னால், (more…)

தலையங்கம்: எது நிஜம்?

தினமணியில் வெளிவந்த தலையங்கம் நீதிமன்றங்களின், குறிப்பாகக் கூறவேண்டுமானால் நீதித் துறையுடன் தொடர்புடையவர்களின் கருத்துகள் விவாதப் பொருளாகி வருவது வேதனைக்குரிய ஒன்று. நீதிபதிகளே இப்படியா,  நீதித்துறையே இப்படித்தானா என்று சராசரி இந்தியன் நம்பிக்கை இழந்துவிட்டால் அதன் விளைவுகள் இந்திய சுதந்திரத்தின், மக்களாட்சி அமைப்பின் அடித் தளத்தையே (more…)

தலையங்கம்: உதறலால் வரும் உளறல்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம் ஹமந்த் கர்கரே கொல்லப்பட்டு இரு ஆண்டுகள் முடிவுற்றுள்ளன. இந்நிலையில், இந்து தீவிரவாத அமைப்புகள் மூலமாக என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று அஞ்சுகிறேன் என்று தம்மிடம் ஹேமந்த் கர்கரே கூறியதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியிருப்பதன் உள்நோக்கம், ஹேமந்த் கர்கரே மீதான நட்போ,  பாசமோ அல்ல. எதையாவது பேசி, அரசியல் வாதிகளின் கவனத்தையும் மக்களின் கவனத்தையும் திசைதிருப்ப வேண்டும் என்பதுதான். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் பாஜக உள்பட எந்தவொரு எதிர்க்கட்சியும் சற்றும் (more…)

தலையங்கம்: ஏன் இந்தத் தயக்கம்?

தினமணியில் வெளிவந்த தலையங்கம் தொடர்ந்து 18 நாள்களாக நாடாளுமன்றம் செயல்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்தான். நாடாளுமன்றம் செயல்படவில்லை என்றால், குடியரசு காயப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, ஊடகங்களில் "ஸ்பெக்ட்ரம்' முறைகேடுகளைப் பற்றித் தொடர்ந்து கண்டனம் எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அதைக் கொஞ்சம்கூட சட்டை செய்யாமல் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதன் விளைவுதான் இப்போது பிரச்னை பூதாகரமாக மாறி, பிரதமரையே கபளீகரம் செய்துவிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்காமல் விட்டிருந்தால், முழுப் பூசணிக்காயும் நிச்சயமாகச் சோற்றில் மறைக்கப்பட்டிருக்கும். பிரச்னை வெளியானவுடன், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயல்படும் அரசாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? சம்பந்தப்பட்ட அமைச்சரைப் பதவி விலகச் சொல்லி, புலனாய்வுத் துறையின

தலையங்கம்: ஏன் இந்த இரட்டை வேடம்?

தினமணியில் வெளிவந்த தலையங்கம் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது. 1989-ல் போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய 470 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட வேண்டும் என்பதுதான் அரசின் வேண்டுகோள். அப்போது உச்ச நீதிமன்றம் உண்மை நிலைமையை முழுமையாக உணர்ந்து கொள்ளாத நிலையில் ஊகத்தின் அடிப்படையில் இழப்பீடு வழங்கிவிட்டது என்றும், இப்போது அதை மறுபரிசீலனை செய்து இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்பதும் மத்திய அரசின் கோரிக்கை.1984-ம் ஆண்டு நடந்த உலகையே உலுக்கிய அந்தச் சம்பவத்தின் 26-வது நினைவுநாளில் இந்தக் கோரிக்கை மனுவை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. ""ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் இழப்பீட்டுக்காக வழங்கிய தீர்ப்பில் சுமார் 3,000 பேர் மட்டும் மரணமடைந்ததாகவும், 50,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 20,000 பேர்த

தலையங்கம்: வெட்கம் கெட்டவர்கள்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம் சாத்தான் வேதம் ஓதுகிறது' என்று பழமொழி கேட்டிருக்கிறோம். "திருடன் கையில் சாவி கொடுத்த கதை' என்றும் பழமொழி கேட்டிருக்கிறோம். இந்தப் பழமொழிகளை எல்லாம் நிஜமாகவே நடத்திக் காட்டி சாதனை புரியப் போகிறோம் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள். சொன்னதை மட்டுமல்லாமல் சொல்லாததையும் செய்யும் இவர்களது வித்தகத்தின் விவேகம் இப்போதல்லவா புரிகிறது. ஏற்கெனவே, கேரள மாநிலத்தின் உணவுத்துறைச் செயலராக இப்போதைய தலைமை ஊழல் தடுப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் இருந்தபோது நடந்த பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. சோனியா காந்தியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதால் இவர் மத்திய தகவல் தொலைத்தொடர்புத் துறையின் செயலராக நியமிக்கப்பட்டபோதே புருவங்கள் உயர்ந்தன. தாமஸ் தகவல் தொலைத்தொடர்புத் துறையில் செயலராக இருக்கும்போதுத