அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்
என் வயது 61. ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி. திருமணமாகி 30 ஆண்டுகள் ஆகிறது. நான்கு மகன்கள்; மூன்று பேர் இன்ஜினியராக, நல்ல உத்தியோகத்தில் இருக்கின்றனர். நான்காவது மகன் மேல்படிப்பு படிக்கிறான்.
என் மனைவி ஒரு பட்டதாரி. திருமணமாகி இரண்டு ஆண்டுகளில், நான் வேலை செய்யும் நிறுவனத்தில், மேலதிகாரிகளின் உதவியால், படாதபாடுபட்டு ஒரு வேலையை அவளுக்கு வாங்கி தந்தேன். அதுவும் நான் குடியிருக்கும் ஊருக்கே மாறுதல் கேட்டு வாங்கி வந்தேன்.
அவள் வேலை செய்யும் அலுவலகம், காவல் துறையில் கைரேகைப் பிரிவாகும். இதுதான் என் வாழ்க்கையில் செய்த மாபெரும் தவறு. அவளது அலுவலகத்தில் பணியாற்றிய செக்ஷன் கண்காணிப்பாளர் ஒரு பெண் பித்தன். என் மனைவி பணியில் சேர்ந்தவுடன், அவன் எப்படியோ பேசி, அவளை, தன் வயப்படுத்திக் கொண்டான்.திருமணமாகி மூன்றாண்டுகள் தான் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். அவளது அலுவலகத்தில் வேலை செய்பவனின் தொடர்ப