Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: தியாகம்

தியாகத் திருநாள் – பக்ரீத்

இந்த பூமியில் மானுட வாழ்க்கை துவங்கியதிலிருந்து, இறைவன் தன் தூதர்களை உலகிற்கு அனுப்பி வந்தான்.ஆதம் (அலை) நபியி லிருந்து தொடங்கி, முஹ ம்மது நபி (ஸல்) உடன் அது  முடிகிறது. இறைவனால் மனிதனு க்கு சத்திய நெறியை முழு மையாக போதிக்க, இறை வனுடைய கட்டளைகள் படி மனிதனின் இம்மை, மறுமை வாழ்க்கை சிற க்க, அந்த நபிமார்கள் பாடு பட்டனர்.அதற்காக அவர்கள் சந்தித்த சிரமங்கள், சிந்திய ரத்தங் கள், செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...அப்படி இப்ராஹிம் நபி (அலை) செய்த தியாகத்தை நினைவுகூர்ந்து தான், தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் என்றும் இன்றைய நாளை உலகம் முழு க்க இருக்கும் அத்தனை (more…)

யாரையும் பயமுறுத்தாதே! – சாய்பாபா

பல்புகள் வேறானாலும் அவற்றில் பாயும் மின்சாரம் ஒன்றே. அதைப் போல் நாடுகள், உடல்கள், உணர்வுகள் இவை யெல்லாம் வேறு வேறாயினும், ஆத்ம தத்துவம் மட்டும் அனைத்து மக்களுக்கும்  ஒன்றேயாகும். * சத்தியம், தர்மம், தியாகம் ஆகியவற்றைப் பின்பற்றி நடப்பவனே உயர்ந்த மனிதன். சத்தியத்தை இனிமையாகவும் முழுமையாகவும் பேசுங்கள். உங்கள் பேச்சு, மற்றவர்களது உணர்ச்சிகளையும் தூண்டி விடுவதாக அமையக்கூடாது. * அநியாயம், பொய்மை, அதர்மம் இவற்றால் குழப்பப்பட்டு இன்றைய உலகம் தத்தளிக்கிறது. சரிந்து வரும் மனித உயர்குணநலன்களை மீட்டு வந்து நிலைநாட்ட இளைஞர்களால் மட்டுமே முடியும். * பாதுகாப்பாகவும், பத்திரமாகவும், அமைதியாகவும், வளமாகவும் இருக்க வேண்டுமானால் உங்கள் நடத்தையும், ஒழுக்கமும் நல்லதாக இருக்க வேண்டும். * மனிதர்கள் பயப்படக்கூடாது. "நானும் பயப்பட மாட்டேன், பிறரையும் பயப்படச் செய்யமாட்டேன்' என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
This is default text for notification bar
This is default text for notification bar