
C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது – நடிகர் ரஜினிகாந்த்
C.A.A. சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது - நடிகர் ரஜினிகாந்த்
இன்றிரவு சுமார் 7.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து திடீரென்று மின்னலாக வெளித்தோன்றிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டும். போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது. அமைதியாக நடைபெறலாம். டெல்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும். உளவுத்துறையின் தோல்வி தான் டெல்லி வன்முறைக்கு காரணம். மத்திய அரசின் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறாது என நினைக்கிறேன். சில கட்சிகள் ம