
கமல் சம்மதித்தால் நான் தயார் – பிக்பாஸ் சேரன்
கமல் சம்மதித்தால் நான் தயார் - பிக்பாஸ் சேரன்
பாரதி கண்ணம்மா, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், வெற்றிக் கொடி கட்டு, பொற்காலம் , பிரிவோம் சந்திப்போம் என தமிழில் வெற்றி படங்களை இயக்கியவர் சேரன். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் தன் திறமையை நிரூபித்தவர். பிக்பாஸ் 3-வது சீசனில் சேரன் போட்டியாளராக கலந்து கொண்டது மக்களை பெரிதும் ஆச்சர்யப்படுத்தியது. அவர் இந்த முறை டைட்டில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் 2 வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் சென்னை வடபழனியில் ஒரு தனியார் திரையரங்கில் நடைபெற்ற ‘வெல்கம் பேக் சேரன்’ என்ற நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்குபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் பற்றி நன்றாக தெரியும். நா