மகளும், நடிகையுமான வனிதா தொடர்பான வழக்கு சம்பந்தமாக, ஐதராபாத்திலிருந்து நடிகர் விஜயகுமார், புறநகர் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் நேரில் திடீரென ஆஜரானார்.
நடிகை வனிதாவின் மகனை விஜயகுமார் வீட்டிலிருந்து அழைத்துச் செல்வதில் ஏற்பட்ட தகராறில் நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே மோதல் வெடித்தது. நடிகர் விஜயகுமார் கொடுத்த புகாரை அடுத்து, வனிதாவின் கணவர் ஆனந்தராஜனை மதுரவாயல் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின், ஆனந்தராஜன் தினசரி மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கணவனை கைது செய்ததால் கொதித்துப்போன நடிகை வனிதா, விஜயகுமார், அவரது மனைவி மஞ்சுளா, விஜயகுமாரின் முதல் மனைவியின் மகன் அருண் விஜய் ஆகியோர் மீது மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.
இப