அன்புள்ள அம்மாவுக்கு —
நான், நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த, 40 வயது பெண். சின்ன வயதில், என் அப்பா வின் நடவடிக்கைகளால், அம்மாபட்ட கஷ்டத்தை பார் த்து பார்த்து, அன்பிற்கு ஏங்கி வளர்ந்தேன். பட்டப்படிப்பு படி க்க ஆசைப்பட்டேன். ஆனால் , வீட்டுச் சூழ்நிலையால், திடீரென்று வந்த மாப்பிள் ளைக்கு, என்னை திருமணம் செய்து வைத்தனர்.
அம்மா... நான் ஒருவரை காதலித்தேன். ஆனால், என் அம்மா தற் கொலை செய்து விடுவார் என பயந்து, என் தாய் சொன்ன மாப்பிள்ளையை, கரம் பிடித்தேன். எனக்கு திருமணமாகி, 23 வருடங்களாகின்றன. வயது வந்த மகன் கள் இருவர் உள்ளனர். என் கணவருக்கு, ஆரம்ப காலத்திலிருந்தே, என்மீது எந்தவிதமான அன்போ, பிடிப்போ, பாசமோ, மனைவி என்ற எண்ணமோ துளியும் இல்லை.
இடையில், என் கணவரின் இந்த பாராமுக நடவடிக்கையால் மனம் வெறுத்து, மன்னிக்க முடியாத சில தவறுகளைச் செய்தேன். என் கணவரும், பதிலுக்கு, எனக்கு மேல் தவறுகளைச் செய்தார்.