
உண்மைச்சம்பவம் – பெற்ற மகனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய தந்தை
உண்மைச் சம்பவம் - பெற்ற மகனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய தந்தை
நான் 9ஆம் வகுப்பு படிக்கும் போது எனக்கு பள்ளித் தோழனாக இருந்து, 10ஆம் வகுப்பு தேர்வாகும்போது எனக்கு வகுப்புத் தோழனாகி, இறுதியில் நெருங்கிய தோழனாகிய என் ஆருயிர் நண்பன் ஆக மாறினான். அவன் பார்ப்பதற்கு அழகாக இருப்பான். நல்ல உயரம், திடகாத்திரமான உடல், கவர்ச்சியான கண்கள், பளிச்சென்று முகம், விவேகமான பேச்சு, அடர்ந்த தலைமுடி, துவைத்து இஸ்திரி போட்ட உடையுடன் இருப்பான். கிட்டத்தட்ட இணைந்த கைகள் திரைப்படத்தில் வரும் நடிகர் ராம்கி சாயலில் இருப்பான். பள்ளிக்கல்வி முடித்தோம். இருவரும் எதிரெதிர் திசைநோக்கி பயணப்பட்டதால் எங்கள் நட்பு மேற்கொண்டு தொடரவில்லை.
பல வருடங்கள் கழித்து யதார்த்தமாக இன்று (03.08.2019) காலை அவனை சந்திக்க நேர்ந்தது. முதலில் அவன்தான் என்னை அடையாளம் கண்டுகொண்டான். எனக்கு சட்டென்று அவனை அடையாளம் காண இயலவில