
வேகம் விவேகமல்ல – ஆளுங்கட்சி சிந்திக்க வேண்டும்
வேகம் விவேகமல்ல - ஆளுங்கட்சி சிந்திக்க வேண்டும்
2019, ஆகஸ்டு மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்
இந்தியாவின் தலை எழுத்தை மாற்றி எழுதிய தல மோடியார் ஆட்சிக்கு முதலில் முதலில் ஒரு ராயல் சல்யூட்
இந்திய தேசம்தான் ஆனால் இந்திய சட்டம் செல்லாது. இந்திய தேசம்தான் ஆனால் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை கிடையாது.
நம்நாடுதான் ஆனால் நம் நாட்டவருக்கு ஒரு மில்லிமீட்டர் இடம் வாங்கக்கூட அனுமதி கிடையாது. மெஜாரிட்டி மக்களை மைனாரிட்டி மக்கள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருப்பர். இப்படி ஒரு விசித்திரமான சட்டங்களுடன் தலைப் பகுதியான காஷ்மீர் புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறது. அந்தப் பகுதியும் இனி இந்திய சட்டத்திற்குள் வந்து விடுவதால் ஒரே நாடு ஒரு சட்டம் என்ற இலட்சியம் ஓரளவுக்கு நிறைவேறியிருக்கிறது.
துணிச்சலான இந்த முடிவைப் பாராட்டுகிற அதே நேரத்தில் ஏன் இத்தனை அவசரமாய்