Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நளன்

பெற்றோரைத் தவிக்கவிடுவோருக்கு கடும் தண்டனை

பெற்றோரைக் கவனிக்காமல் தவிக்கவிடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. பெற்ற மக்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் தங்களது சாதாரண வாழ்க்கைத் தேவைக்கான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ உதவி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யவும், இவற்றுக்கான செலவுக்கு பொருளாதார உதவி கிடைக்கச் செய்யும் வகையிலும் மத்திய அரசு ‘பெற்றோர் மற்றும் முதியோர் நலச்சட்டம் 2007 மற்றும் விதிகள் 2009’ என்ற சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் மட்டுமல்லாது தங்களுக்குப் பின்னர் சொத்துக்களை பராமரிக்கவும், அனுபவிக்கவும் நியமிக்கப்பட்ட வாரிசுகளை உடைய முதியோர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தும். 60 வயதைக் கடந்த அனைத்து முதியவர்களுமே இந்த சட்டத்தின் மூலம் உரிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். தனி நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் தனிப்பிரிவு, மாவட்டந்