Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நாகை

காவேரி ஆற்றின் வரலாறு

கர்நாடக மாநிலம் குடகுமாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இட த்தில் காவிரி உருவாகிறது. பிறப்பிடம்:- இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள் ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச்சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் (more…)

24 மணி நேரத்தில் பரவலாக மழை; வானிலை ஆய்வு மையம் தகவல்

  வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கையின் வான்வழி மண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாராக மழை பெய்துள்ளது. பொன்னேரியில் அதிக அளவாக 6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. காஞ்சீ புரம்,  மதுராந்தகம்,  கடலூரில் 3 செ.மீ., திண்டுக்கல், கடலாடியில் 2 செ.மீ., சிவகங்கை, பவானி, கரூரில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது. 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக லேசானது முதல், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மழை படிப்படியாக குறையும். சென்னையில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது. நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கும் பிறகு மழை குறைய வாய்ப்புள்ளது. (மாலை இதழ் ஒன்று வெளியிட்ட செய்தி)  

மழையால் தத்தளிக்கும் சென்னை

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், குறைந்த தாழ்வழுத்த மண்டலம் உருவாகி இருப்பதாலும் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை சேதம் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 8 பேர் நியமிக்கப்பட்டனர். இந்த அதிகாரிகள் தங்களுடைய ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்து வருகின்றனர். இது தொடர்பாக நாளை அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. தஞ்சாவூரில் மட்டும் 30 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. தஞ்சை, கடலூர், திருவாரூர், நாகை, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்து இருக்கிறது. தமிழகத்தில் பெய்த மழைக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்திருக்கிறது. இன்று முதல் தென் மாவட்டங்களில் லேசான வெயில் தலை காட்டத்து வங்கியிருக்கிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் முதல் சென்னையில் தொடர் மழை பெய்த க