Wednesday, October 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: நிறுவனர்

ஜாமீனில் வெளியே வந்த விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் ஆவேசம்

ஜாமீனில் வெளியே வந்த விக்கிலீக்ஸ்' நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச், செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் மீதான குற்றச் சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. அவை போலி என்பதை நிரூபிப்பேன். தொடர்ந்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வருவேன்' என்று தெரிவித்தார். இந்நிலையில், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: (more…)

விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சுக்கு நிபந்தனையின்கீழ் ஜாமீன்

அமெரிக்காவின் ரகசியங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்த சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையதள உரிமையாளரும் நிறுவன ருமான‌ ஜூலியன் அசாஞ்சுக்கு ஜாமீன் கிடைக்க கடும் நெருக்கடி இருந்த நிலையில் லண்டன் உயர்நீதி மன்றம், அவருக்கு  நிபந்தனையின் கீழ் ஜாமீன் வழங்கி  (more…)

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனருக்கு ஜாமீன் கிடைத்தும் விடுதலை ஆவதில் சிக்கல் . . .

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அவர் விடுதலை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விக்கிலீக் இணைய தளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாங்கே (39). இவர் தனது இணைய தளத்தில் அமெரிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் தூதரகங்களின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வழக்கில் கைது செய்ய “இண்டர் போல்” போலீசார் “வாரண்ட்” பிறப்பித்தனர். எனவே, அவர் லண்டன் கோர்ட்டில் சரண்அடைய சென்ற போது போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இதை தொடர்ந்து தன்னை ஜாமீனில் விடும்படி மத்திய லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வக்கீல் மார்க்ஸ்டீபன் மூலம் அசாங்கே மனு செய்தார். அவரை ஜாமீனில் விட்டால் இங்கிலாந்தில் இருந்து தப்பி விடுவார் என எதிர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இருந்தும், அவரது வக்கீல

விக்கிலீக் ரகசிய ஆவணங்கள்: துருக்கி, மெக்சிகோ நாடுகளிடம் ஒபாமா வருத்தம்

வெளிநாடுகளில் இருந்து அந்தந்த நாடுகளைப்பற்றி அமெரிக்க தூதர்கள் அனுப்பிய ரகசிய தகவல்களை விக்கிலீக் இணையதள நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது. இதனால், அமெரிக்காவுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், துருக்கி பிரதமர் டையிப் எர்டோகன், மெக்சிகோ அதிபர் பிலிப் கால்டரோன் ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று தனித் தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, `விக்கிலீக் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்காக மிகவும் வருத்தம் தெரிவிக்கிறேன்' என அவர்களிடம் ஒபாமா தெரிவித்தார். ஒபாமா கருத்தை ஏற்றுக்கொண்ட அந்த இரண்டு தலைவர்களும், `விக்கிலீக் வெளியிட்ட தகவல்களால் அமெரிக்காவுடன் தங்கள் நாடுகளுக்கு இருந்து வரும் நட்புறவில் பாதிப்பு ஏற்படாது' என உறுதி அளித்தனர். இந்த தகவலை வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு வெளியிட்டது. இதற்கிடையே, இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் அசேஞ்சுக்கு, ரஷ்யா ஆதரவு

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியான் அசேஞ்சுக்கு ‌அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க வேண்டும் என ரஷ்யா பரிந்துரைத்துள்ளதை அடுத்து பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. சமீபத்தில் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட பல்வேறு ரகசியங்களை பகிரங்கமாக வெளயிட்டது. இது அமெரிக்காவின் நிழல் உருவத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. அமெரிக்காவின் இந்த குட்டு வெளிப்பட்டதால், ஏக சந்தோஷத்தில் இருக்கிறது ரஷ்யா. அதன் வெளிப்பாடே அசேஞ்சுக்கு ஆதரவுதான். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக உலக நாடுகளுகளின் முன்வைக்க வேண்டும் சிபாரிசு செய்துள்ளது ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வேதேவ் அலுவலம் என்ற தகவல் வெளியாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன•  மேலும் ரஷ்யாவின் இந்த பரிந்துரை, அமெரிக்க அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பாதுகாப்பு மையம்!

அமெரிக்காவின் ராணுவ மற்றும் தூதரக ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணைய  தளம் வெளியிட்டு உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. இதை யடுத்து அமெரிக்காவின் மிரட்டலை தொடர்ந்து அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்கே இங்கிலாந்தில் தலைமறைவானார். இந்த சூழ்நிலையில் சுவீடனில் 2 பெண்களை கற்பழித்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச போலீஸ் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து லண்டனில் வெஸ்மினிஸ்டர் நகர மாஜிஸ்திரேட்டு ஐகோர்ட்டில் சரண் அடைய சென்ற போது அவரை போலீசார் கைது செய்தனர். அந்நீதிமன்றம்  அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்து விட்டது. (செய்தி – நக்கீரன் / ப‌டங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்)

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது – வீடியோவில்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது செய்யப்பட்டார். எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்பது மிகுந்த இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோவில் . . .

விக்கிலீகீஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது

விக்கிலீகீஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது செய்யப்பட்டார். எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்பது மிகுந்த இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக விக்கிலீக்ஸ் இணையதள தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசான்ஜ் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டால் அவருக்கு . . .

விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜுலியன் அசான்ஜ் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டால் அவருக்கு தூதரகம் மூலம் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இத்தகவலை ஆஸ்திரேலிய அரசின் தலைமை வழக்கறிஞர் ராபர்ட் மெக்லேலேண்ட் இன்று சிட்னியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். உலகெங்கும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களின் ரகசிய அறிக்கைகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளதால், தற்போது அவர் சர்வதேச போலீஸாரால் தேடப்பட்டு வருகிறார். ஜுலியன் அசான்ஜ் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, அவர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டால் தூதரகம் மூலம் உதவி வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. thanks dinamani

விக்கிலீக்ஸ்: ஒபாமா பதவி விலக வேண்டும்

ஐ.நா.,வில் உளவு பார்த்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று விக்கிலீக்ஸ் நிறுவனர் கூறியுள்ளார். இது தொடர்பாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் கூறுகையில், ஐ.நா., அலுவலகத்தில் உளவு பார்க்க சொன்ன விவகாரம் மிகவும் முக்கியமானது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா சட்டத்தை மதிக்கும் நாடாக விளங்குமானால் அதன் அதிபர் பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் தனக்கு தெரிந்த அனைத்தையும் ஒபாமா விளக்க வேண்டும். இது குறித்து அவர் விளக்கமளிக்க மறுத்தாலோ, அல்லது உளவு பார்க்க அவர் ஒப்புதல் அளித்தாக ஆதாரங்கள் இருந்தாலோ அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். (நாளேடு ஒன்றில் வெளியான செய்தி)