
ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்
ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்
ஒருவருக்கு விற்ற அதே சொத்தை மீண்டும் வேறு ஒருவருக்கு விற்றது சட்டப்படி குற்றம். இதற்காக முதலில் அந்த சொத்தை வாங்கியவர் காவல் நிலையத்தில் விற்றவர்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கலாம்.
மேலும் சொத்தை விற்றவர் இரண்டாவதாக வேறு நபருக்கு எழுதிப் பதிவுசெய்து கொடுத்துள்ள விற்பனை ஆவணத்தை ரத்து செய்ய முதலில் வாங்கியவர் மாவட்டப் பதிவாளர் (நிர்வாகம்) அவர்களிடம் புகாராக அளிக்க வேண்டும். மேற்படி விற்பனை ஆவணம் ரத்து செய்யப்பட்ட பின்னர், பட்டா பெறாமலிருந்தால், வட்டாட்சியரிடம் மனு செய்து அதை முதலில் வாங்கியவரது பெயரில் பட்டா விண்ணிப்பித்து பட்டா பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு சொத்தின் சுவாதீனம் யாரிடம் உள்ளது என்பதற்கு பட்டா போன்ற வருவாய்த்துறை ஆவணங்களே முக்கிய சான்றுகளாகும்.
கிரைய ஆவணங்கள் உ