கலைமகளின் ஆசிபெற்ற கலைமகன் எம்.ஓ.பி., வைஷ்ணவா கல் லூரியின் கலை சேவைப் பிரிவான வி.டி.எஸ்., ஆர்ட்ஸ் அகடமியி ல், ஆண்டு முழுவதும் சிரபுஞ்சியைப் போல், இளைய கலைஞர்கள் மட்டுமே நிகழ்ச்சிகள் அளிக்க வாய்ப்புத் தரு வது, மிகச் சிறப்பான ஒன்று.
பொதுவாக இசை விழா சமயத்தில் பல சபாக்கள், இளம் கலைஞர்களுக்கு வாய் ப்புகள் கொடுத்தாலும், "டிராப்' எனப்படும் இவ் வமை ப்பு வாராவாரம், வார இறுதி நாட்களில் குரலிசை, கருவி இசை, நடனம் இம்மூன்றுக்கும் சரியான விகிதத்தில், இளம் கலைஞர்க ளுக்கு நிகழ்ச்சிகளை நடத்த இடம், ஒலி, ஒளி அமைப்புகள், சான் றிதழ் அரங்கம் என, அனைத்தும் இலவசமாய் கொடுப்பது மிகப் பெரிய விஷயம்.
இதில், சூர்யா சந்தானத்தின் சிஷ்யை குட்டி பரத கலைஞரான, நேத் ரா லெனினின் நிகழ்ச்சி நடைபெற்றது. நேத்ரா லெனின் சங்கரா வித்யாஸ்ரமத்தில் ஐந்தாவது படிக்கிறார். பல சபாக்கள், நாட்டியா ஞ்சலி, கோவில்கள் என, பல இடங்களில் நிகழ்ச்சிகள