சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு
ஐ.ஜி.க்கு இணையாக முத்துக்கருப்பன், ராஜா, திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் கூடுதல் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு
கும்பகோணத்தில் மாநில போக்குவரத்து கழகத்தில் முதன்மை விஜிலென்ஸ் அதிகாரியாக இருந்த முத்துக்கருப்பன், ஊர்க்காவல் படை கூடுதல் கமாண்டண்டாக நியமனம்.
கரூரில் உள்ள தமிழ்நாடு காகித ஆலையில் விஜி லென்ஸ் அதிகாரியாக இருந்த வி.ராஜா, மாநில போக்குவரத்து திட்ட பிரிவு கூடுதல் இயக்குனராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
சிறைத்துறை ஐ.ஜி.யான திரிபாதி, அதே துறையில் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமினம்
சென்னை தலைமையக ஐ.ஜி. காந்தி ராஜன், மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாகியுள்ளார்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன் பிறப்பித்துள்ளார்.