இந்தியா மற்றும் தெற்காசியாவுக்கான மலேசியாவின் உட்கட்டமைப்புக்கான சிறப்புத் தூதராக, மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ சாமிவேலுவை(74) அந்நாட்டு அரசு நியமித்துள்ளது. மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 30 ஆண்டுகளாக இருந்தவர் டத்தோ சாமிவேலு. சமீபத்தில் அவர் தனது பதவியை விட்டு விலகினார். இதையடுத்து, கட்சியின் புதிய தலைவராக ஜி.பழனிவேல் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, மலேசிய நாட்டின் உட்கட்டமைப்புக்கான, இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதராக டத்தோ சாமிவேலு நியமிக்கப்பட்டுள்ளார். கோலாலம்பூரில், அவரது வாழ்க்கை வரலாற்று நூலான "ஏ லைப், ஏ லிஜண்ட், ஏ லிகசி' என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அதில் தலைமையேற்று பேசிய மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக், இந்த அறிவிப்பை வெளியிட்டார். அவ்விழாவில் பேசிய நஜீப், "மலேசியா சாமிவேலுவின் திறமையை இழக்க வ