திருச்சி அருகே திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்தை சூரியக்கதிர்கள் வழிப்பட்டதை தரிசித்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.
பொன்னி நதியாம் காவிரி பாயும் சோழவளநாட்டின் மையப் பகுதியான திருச்சியின் வடக்கே 25 கி.மீ., தூரத்தில், சென்னை பை-பாஸ் அருகே உள்ள திருப் பட்டூரில் பிரம்ம சம்பத் கௌரி உடனுறை பிரம்ம புரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. உலகிலுள்ள படைப்புகளுக்கு எல்லாம் தலையெழுத்தை நிர்ணயி க்கும் பிரம்மனுடைய தலையெழுத்தை மாற்றி எழுதி, தன்னை நோக்கி தவமிருந்த பிரம்ம னுக்கு சிவன் அருள்பாலித்த திருத்தலம். இதன் மூலம் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் தலை யெழுத்தெல்லாம், திருமால், பதஞ்சலி, வியாக் கிர பாதர், சூரியபகவான் ஆகியோரால் மங்க ளகரமாக மாற்றியருள பிரம்மனுக்கு சிவன் வரம் அளித்த ஸ்தலம். இத்தகைய புராண சிறப்புப்பெற்ற திருத்தலத்தில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில், சூரிய