Thursday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பரிசு

காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்

காதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்

காதல் முறிவு - தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் - ஓரலசல் காதல் என்பது ஓர் உன்னதமான உணர்வு என்பதில் எள்ளள‍வும் சந்தேகமில்லை. ஆனால் அந்த உன்னதமான‌ காதல் உண்மையான வர்களுக்கு, நேர்மையான வர்களுக்கு வந்தால் அந்த உன்னத‌ காதல், மென்மேலும் மெருகேறும் என்பது நிதர்சனமான‌ உண்மையே! ஆனால் தற்போதெல்லாம் உன்னத காதலுக்கு இழுக்கு ஏற்படும் வகையில்தான் காதலென்ற பெயரில் வக்கிரங்களும், காம லீலைகளும் அரங்கேறி இந்த சமூகம், மலத்தைவிட பன்மடங்கு துர்நாற்றம் வீசி சீர்கெட்டு போயுள்ளது. இது வேதனை தரும் விடயம்தான். காதலுக்கு எதிர்ப்பு என்பது மொழி, சாதி, இனம், மதம் போன்ற வற்றால் வருவது ச‌கஜமானது என்றாலும் அத்தகைய எதிர்புக்களை யெல்லாம் சமாளித்து காதலித்தவரையே கரம்பிடித்து ஆயுள்முழுக்க அன்யோன்ய‌மாக வாழ்ந்து காதலுக்கு பெருமை சேர்த்தவர்கள் வெகு சிலரே. மேற்படி எதிர்ப்புக்கள் அத்தனையும் சமாளித்து, சட்

காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள்

உலக காதலர்கள் கொண்டாடும் காதலர் தினம் குறித்து பல்வேறு சுவையான தகவல்கள் கூற ப்படுகின்றன. காலம் காலமாய் கூறப்பட்டு வரும் காதலர் தினக்கதைகள் தியாகம் நிறைந் தவை. அந்த கதைகளை காதலர் தினத்திற்காக பகிர்ந்து கொள்கிறோம். வேலண்டைன்ஸ் டே வேலண்டைன்ஸ் டே என்று (more…)

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் “N.K.T.முத்து” ஒரு கர்ணன்!

கலைஞர்களை கௌரவிப்ப‍தில் இவர் ஒரு கர்ணன் ! விழாக்கள் நடத்துவதில் வித்தியாசங்களைப் புகுத்தியவர்! "கலைமாமணி" கலைஞர்களை உருவாக்கிய கலைத் தொண்டர் இன்றைய நேற்றைய இலக்கிய, இசை, நடன, நாடக, திரைப்பட உலகினர் ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவர் அவர். சென்னை யில் அவர் கையால் விருது பெறாத கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பாராட்டுப் பெற்ற‍ கலைஞர்களை பட்டியலிட் டால் பக்க‍ங்கள் போதாது. இன்று இசை நடன நிகழ்வுகளுக்கு வாய்ப்ப‍ளித்து, வளர்கின்ற சபாக் களைப் போல•.. அன்றைய நாடக, மெல்லிசைக் குழுக்களுக்கு மேடையளித்து... விழா எடுத்து விருதுகள் வழங்கி கலையுலகை விருட்சத்துக்கு விதையாய் (more…)

தியாகத் திருநாள் – பக்ரீத்

இந்த பூமியில் மானுட வாழ்க்கை துவங்கியதிலிருந்து, இறைவன் தன் தூதர்களை உலகிற்கு அனுப்பி வந்தான்.ஆதம் (அலை) நபியி லிருந்து தொடங்கி, முஹ ம்மது நபி (ஸல்) உடன் அது  முடிகிறது. இறைவனால் மனிதனு க்கு சத்திய நெறியை முழு மையாக போதிக்க, இறை வனுடைய கட்டளைகள் படி மனிதனின் இம்மை, மறுமை வாழ்க்கை சிற க்க, அந்த நபிமார்கள் பாடு பட்டனர்.அதற்காக அவர்கள் சந்தித்த சிரமங்கள், சிந்திய ரத்தங் கள், செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல...அப்படி இப்ராஹிம் நபி (அலை) செய்த தியாகத்தை நினைவுகூர்ந்து தான், தியாகத் திருநாள் என்றும், பக்ரீத் என்றும் இன்றைய நாளை உலகம் முழு க்க இருக்கும் அத்தனை (more…)

மஞ்சளின் மகத்துவம்

ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவ சியமில்லை’ என்பது முன்னோர் வாக்கு.  பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரிய ங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கி றது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி , பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ் சளின் புனித தன்மையால், அவற்றை (more…)

இளநீர் அருந்து, தேவையில்லை மருந்து!

இயற்கை நமக்குத் தந்துள்ள பரிசு இளநீர் இளநீர் இயற்கை நமக்குத் தந்துள்ள புத்துணர்ச்சி தரும் இனிய பானம் தென்னை தரும் இளநீர் மிகவும் சுவையானது சத்தா னது கோடையின் கொடுமையைத் தணி க்க வெப்ப மண்டல மக்களுக்கு இயற் கை தந்துள்ள வரப்பிரசாதம். தாகத்தைத் தணிக்கும் பானம் மட்டு மல்ல தாதுபொருட்கள் அடங்கிய பல நோய்களைத் தீர்க்கும் தன்மை யும் கொண்டது. மனித உடலில் அதிக அளவு நீர்ச்ச த்து விரயமானால் அவற்றைச் சரி செய்ய எளிதில் குறைந்த செலவில் கிடைப்பது இளநீர் மட்டுமே. இள நீரில் உள்ள புரதச்சத்து பசும்பாலில் உள்ளதைவிட அதிகமாகும். இளநீர் தரும் சத்தின் அளவு 17.4 கலோரி ஆகும். ஆகையால் சிறந்த மருத்துவ குணம் கொண்ட (more…)

நோபல் பரிசை வழங்கும் விழாவை சீனா இருட்ட‌டிப்பு செய்ய . . .

அயல்நாட்டு செய்தி நிறுவனங்களின் இணையதளங்களை சீன அரசு தடை விதித்துள்ளது. சீனாவின் சுதந்திரத்திற்காக போராடி வரும் லியூஷியாவ்போ என்பருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கியுள்ளது. இதற்கு சீனா கடுமையாக‌ தனது எதிர்ப்பினை தெரிவித்திருந்த போதினும், அவருக்கு வழங்கப்பட்டுள்ள நோபல் பரிசை திரும்ப பெற போவதில்லை என்று நோபல் பரிசு வழங்கும் கமிட்டி தெரிவித்து விட்டதால், பரிசு வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. நோபல் பரிசு வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சீன ஆதரவு நாடுகள் விழாவை புறக்கணித்தது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறது. நோபல் பரிசை போன்று அதற்கு இணையான மற்றொரு பரிசை தரப் போவதாக சீனா அதிரடியாக‌ அறிவித்த அதே நேரம் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் நோபல் பரிசை வழங்கும் விழாவை ஒளிபரப்பு செய்வதை சீனாவில் தெரியாத வகையில் அதாவது இருட்ட‌டிப்பு செய்ய இருப்பதற்காக அந்நி