காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளி செல்வதற்கு பாதுகாப்புப் படையினர் அனுமதித்தனர். எனினும் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டாம் என ஹூரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானி தெரிவித்திருந்ததால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது. போலீஸ் கண்ணீர்ப் புகைக் குண்டுவீச்சில் 17 வயது மாணவர் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் அங்கு கல்வி அமைப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் சுமுகமாக இயங்கவைக்க காஷ்மீர் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. மாணவர்களையும், ஆசிரியர்களையும் பள்ளிகளுக்கு அழைத்து வர மாநில அரசுப் பேருந்துக